International12 May 2013

உத்தியோகபூர்வ பெறுபேறுகள் வெளியாகவில்லை


பாக்கிஸ்தானிய தேர்தல் பெறுபேறுகள் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

இருப்பினும் பாக்கிஸ்தானிய நாடாளுமன்ற 272 ஆசனங்களில் 100 இற்கும் மேற்பட்ட ஆசனங்கள் நவாஸ் ஷெரிபின் முஸ்லீம் லீக் கட்சிக்கே கிடைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில் முன்னாள் பாக்கிஸ்தானிய பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் ஆதரவாளர்கள் கொண்டாட்ட நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர்.

தேர்தல் தினத்தன்று பாக்கிஸ்தானில் நிலை கொண்டுள்ள தாலிபான் போராளிகள் கராச்சியில் மேற்கொண்ட குண்டுத் தாக்குதலில் 11 பேர் கொல்லப்பட்டனர்.
 
அந்த தாக்குதலில் மேலும் 40 பேர் காயமடைந்தனர்.

இந்த தாக்குதலை அடுத்து, கராச்சியில் வாக்களிக்கும் விகிதத்தில் சரிவு நிலைமை ஏற்பட்டதாக அறிவிக்கப்பட்டள்ளது.

இதனை தவிர, ஏனைய பிரதேசங்களில் வாக்களிப்பவர்களின் விகிதாசாரம் உயர் நிலையில் இடம்பெற்றதாக தேர்தல் கண்காணிப்பாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
Related recommendation
Hiru TV News | Programmes