International18 May 2013

பாரிய விண்கல் மாதயிறுதியில் புவியை கடக்கும்

குயின் எலிசபெத் - 2 கப்பல் அளவையுடைய பாரிய விண்கல் ஒன்று இந்த மாத இறுதியில் புவியை கடந்து செல்லவுள்ளதாக கலிபோனியாவின் நட்சத்திர நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

அந்த விண்கல் எதிர்வரும் ஜுன் முதலாம் திகதி புவிக்கு அருகில் பயணிக்கும் என்று அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

எவ்வாறாயினும், குறித்த விண்கல் புவிலிருந்து 3.6 மில்லியன் மைல்களுக்கு அப்பாலே பயணிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அது நிலவுக்கும், புவிக்கும் இடையிலான தூரத்தை விட 15 மடங்கு அதிகம் என்று நட்சத்திர நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

குறித்த பாரியளவிலான விண்கல் புவியை கடந்து செல்லும் போது கலிபோர்னியாவில் மொஹாட் பாலைவனத்தில் உள்ள கோல்ட்ஸ்டோன் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் உள்ள 230 அடி அகலமான ரேடார் கதிர்கள் மூலம் ஊடுகதிர் படமெடுப்பதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதுதவிர, எதிர்வரும் இரண்டு நூற்றாண்டுகளில் புவிக்கு பாரிய தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய விண்கல் ஒன்று நெருங்கி வருவதாகவும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

எனினும், பாரிய விண்கற்கள் ஒவ்வொரு 6 வருடங்களுக்கு ஒருமுறை புவிக்கு 5 லட்சம் மைல்களுக்கு அப்பால் பயணிக்கின்றன.

இதேபோன்று 2182 ஆம் ஆண்டளவில் புவிக்கு பாரியளவில் பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய விண்கல் ஒன்று நெருங்கி வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது புவியில் மோதுவதற்கு 1800 இல் 1 மடங்கு சந்தர்ப்பம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related recommendation
Hiru TV News | Programmes