International23 May 2013

அவசர குழு கூட்டம்


இரண்டு முஸ்லிம் தீவிரவாதிகளால் பிரித்தானியாவின் இராணுவ சிப்பாய் ஒருவர் கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, பிரித்தானிய அரசாங்கத்தின் அவசர குழு கூட்டம் கூட்டப்பட்டுள்ளது.

லண்டனில் உள்ள பிரதான வீதி ஒன்றில் வைத்து குறித்த இராணுவ சிப்பாயை, இரண்டு முஸ்லிம் தீவிரவாதிகள் வெட்டி கொலை செய்தனர்.

பின்னர் காவற்துறையினர் சம்பவ இடத்துக்கு வரும் வரையில் காத்திருந்த அவர்கள் தாங்கள், கடவுளால் அனுப்பப்பட்டவர்கள் எனவும், தங்களின் தேசத்தில் முஸ்லிம்கள் கொல்லப்படுவதற்கு பழிவாங்கும் வகையிலேயே இந்த கொலையை செய்ததாகவும் தெரிவித்தனர்.

இந்த காட்சிகள் அடங்கிய காணொளிகள் பிரித்தானிய தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட்டதைத் தொடர்ந்து, பிரித்தானிய மக்கள் மத்தியில் பீதி நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதற்கிடையில் இந்த சம்பவம் பயங்கரவாதத்தினை தெளிவாக எடுத்துக் காட்டுவதாகவும், பிரித்தானிய பொது மக்களுக்கான பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாகவும், பிரித்தானிய பிரதமர் டேவிட் கெமரூன் தெரிவித்துள்ளார்.

 

Related recommendation
Hiru TV News | Programmes