International09 June 2026

மத்திய கிழக்கு பதற்றம் எதிரொலி : உலக சந்தையில் எண்ணெய் விலை வீழ்ச்சி – இயற்கை எரிவாயு விலை உயர்வு

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் தீவிர போர் பதற்றங்களுக்கு மத்தியில், உலகளாவிய எரிசக்தி சந்தையில் மசகு எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவின் விலையில் இன்று (09) மாற்றங்கள் பதிவாகியுள்ளன.

உலக சந்தை நிலவரங்களின்படி, WTI (West Texas Intermediate) ரக மசகு எண்ணெய்யின் விலை பீப்பாய் ஒன்றுக்கு 90.12 அமெரிக்க டொலராக குறைந்துள்ளது.

அதேவேளை, சர்வதேச சந்தையில் பரவலாக பயன்படுத்தப்படும் Brent ரக மசகு எண்ணெய்யின் விலை பீப்பாய் ஒன்றுக்கு 93.37 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.

இதற்கிடையில், இயற்கை எரிவாயு (Natural Gas) விலையிலும் உயர்வு காணப்பட்டுள்ளது.

அதன்படி, இயற்கை எரிவாயுவின் விலை 3.163 அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளதாக உலகளாவிய எரிசக்தி சந்தைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மத்திய கிழக்கில் தொடரும் பதற்ற நிலைமை காரணமாக, எதிர்வரும் நாட்களிலும் எரிசக்தி சந்தையில் விலை ஏற்றத் தாழ்வுகள் தொடரக்கூடும் என பொருளாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
Related recommendation
Hiru TV News | Programmes