தமிழக முதலமைச்சர் விஜய்யை பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் நேரில் சந்தித்துப் பேசியுள்ளார். இந்த சந்திப்பைத் தொடர்ந்து அவர் ஊடகங்களுக்கு விசேட பேட்டியொன்றை அளித்துள்ளார்.
முதலமைச்சருடனான சந்திப்பு மற்றும் அதன் போது முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் குறித்து அன்புமணி ராமதாஸ் தனது பேட்டியில் தெரிவித்துள்ளதாவது,
"தமிழக முதலமைச்சர் விஜய்யை சுமார் 25 நிமிடங்கள் நேரில் சந்தித்துப் பேசினேன். இந்த சந்திப்பின் போது, தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்பதை அவரிடம் நான் முக்கிய கோரிக்கையாக வலியுறுத்தினேன்."
"தமிழகத்தில் நடைமுறையிலுள்ள 69 சதவீத இட ஒதுக்கீட்டைப் பாதுகாக்க வேண்டியது அவசியமாகும். மாநில அரசு சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தினால் மட்டுமே அது மிகவும் துல்லியமானதாக இருக்கும்."
"சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படுவது குறித்த அறிவிப்பு ஆளுநர் உரையில் இடம்பெற வேண்டும் என வலியுறுத்தியுள்ளேன். அத்துடன், இதனை தமிழக அரசின் கொள்கை முடிவாக அறிவிக்க வேண்டும் என்பதும் எமது கோரிக்கையாகும்." எனத் தெரிவித்துள்ளார்.
Latest News
"ஜே.வி.பி-யின் தேர்தல் மேடைப் பாடல்களுக்கு ஒரு நீதி, கிளிநொச்சி இளைஞருக்கு ஒரு நீதியா?"
Local
09 June 2026
'AK 64' படத்திற்காக ரூ.187 கோடி வேதனம்? : அஜித்தின் அதிரடி கண்டிஷன்!
Local
09 June 2026
"அரசாங்கம் கவிழப்போவது தெரிந்தும் கூச்சலிடும் கோமாளிகள்..!"
Local
09 June 2026
டெரிகிளேயர் தோட்டத்திலிருந்து பத்தனை சந்திக்கு புதிய பேருந்து சேவை ஆரம்பம்
Local
09 June 2026
பெருந்தோட்ட முதலீட்டு மோசடிகள் குறித்து இலங்கை மத்திய வங்கி அவசர எச்சரிக்கை!
Local
09 June 2026
கோடி கணக்கில் இந்திய உதவி கிடைத்தும் மாறாத அவலம்: தற்காலிக வீடுகளில் முடங்கிக்கிடக்கும் 35,000 மக்கள்!
Local
09 June 2026
10 கூடாரங்கள் அமைத்து கூச்சலிட்டாலும் விசாரணைகள் நிறுத்தப்பட மாட்டாது - நளிந்த ஜயதிஸ்ஸ
Local
09 June 2026
மருத்துவ உலகில் புதிய புரட்சி: மனித உடலில் பன்றியின் கல்லீரல், சிறுநீரகங்களை ஒரே நேரத்தில் பொருத்தி சீன விஞ்ஞானிகள் உலக சாதனை!
Local
09 June 2026
'Scooby-Doo: Origins' - நெட்பிளிக்ஸ் வெளியிடும் புதிய நேரடித் தொடர் பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள்!
Local
09 June 2026
பெண்ணைத் தாக்கிய விவகாரம்: தேசிய மக்கள் சக்தியின் பசறை பிரதேச சபை உப தவிசாளர் , மகனுக்கு பிணை
Local
09 June 2026