முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ச மற்றும் கோட்டாபய ராஜபக்ச ஆகியோருடன் தற்போதைய அரசாங்கத்திற்கு உள்ள அரசியல் முரண்பாடுகளைத் தீர்த்துக்கொள்ள, நாட்டுக்காக வாழ்க்கையை அர்ப்பணித்த இராணுவ வீரர்களை பகடைக்காய்களாகப் பயன்படுத்த வேண்டாமெனவும், அவர்களைச் சிறையிலடைத்து அரசியல் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள முயற்சிக்க வேண்டாமெனவும் அரசாங்கத்திற்கு நா
டாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச வலியுறுத்தியுள்ளார்.கொழும்பு கோட்டை தொடருந்து நிலையத்திற்கு முன்பாக சுரேஷ் சலேக்கு ஆதரவாக இரண்டாவது நாளாகவும் நேற்று (09) இடம்பெற்ற சத்தியாக்கிரகப் போராட்டத்தில் கலந்துகொண்ட போதே அவர் இதனை தெரிவித்தார்.
தற்போதைய ஆட்சியாளர்கள் புலம்பெயர் அமைப்புகளை திருப்த்திப்படுத்துவதற்காக செயற்படுவதாகக் குற்றஞ்சாட்டிய அவர் 2009 மே 18 அன்று போர் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டு பெற்றுக்கொள்ளப்பட்ட சுதந்திரத்தின் பயனை இன்று ஒட்டுமொத்த நாட்டு மக்களும் அனுபவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், அதற்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்ட இராணுவ வீரர்களுக்கு மட்டும் அந்தச் சுதந்திரத்தை மறுத்து, அரசியல் வேட்டையாடலில் அரசாங்கம் ஈடுபட்டு வருவதாகவும் குறிப்பிட்டார்.
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் உண்மையான நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்பதை வலியுறுத்திய எதிர்க்கட்சிப் பிரதிநிதிகள், ஜே.வி.பி கட்சியின் தேசியப் பட்டியலில் மொஹமட் இப்ராஹிமை உள்ளடக்கியது யார்? தாக்குதலின் மூளையாகச் செயற்பட்ட சஹ்ரான் ஹாஷிமுக்காக வாதாடிய சட்டத்தரணிகள் யார்? அவர்களை வழிநடத்தியது யார்? போன்ற உண்மைகள் சமூகத்திற்கு வெளிப்படும் காலம் வெகுதூரத்தில் இல்லை என்றும் தெரிவித்தனர்.
அரசியல் நிகழ்ச்சி நிரல்களை முன்னிறுத்தி மேற்கொள்ளப்படும் இத்தகைய அநீதியான செயற்பாடுகளால் இறுதியில் பாதிக்கப்படப்போவது இந்த நாட்டின் பொதுமக்களே என்றும் அவர் இதன்போது எச்சரித்தார்.
Latest News
எண்ணெய் விலையில் அதிரடி மாற்றம்
Local
10 June 2026
இராணுவ வீரர்களை அரசியல் பகடைக்காய்களாகப் பயன்படுத்த வேண்டாம்: அரசாங்கத்திற்கு நாமல் ராஜபக்ச எச்சரிக்கை
Local
09 June 2026
சங்கீத்சனின் கைது அரச பயங்கரவாதம்: விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கடும் கண்டனம் !
Local
09 June 2026
சிங்கப்பெண் அதிரடிப்படை அறிமுக நிகழ்வு: ஏ.ஐ. காணொளியில் எழுத்துப் பிழைகள் - புதிதாக எழுந்த விமர்சனம்
Local
09 June 2026
தொடருந்து பாதுகாப்பு அதிகாரிகள் சங்கம் இன்று நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பு
Local
09 June 2026
ஏற்றுமதி வருமானத்தை இலங்கை ரூபாவாக மாற்றுவது கட்டாயம்: புதிய விதிமுறை அறிமுகம்
Local
09 June 2026
காவல்துறை விசேட நடவடிக்கையில் 10 பேர் கைது: ஆபத்தான பொருட்கள் மீட்பு!
Local
09 June 2026
பயங்கரவாத தடைச் சட்டம் முற்றாக ஒழிக்கப்படும் - பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர்
Local
09 June 2026
லங்கா சதொச ஊடாக 18 அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைக்க தீர்மானம்
Local
09 June 2026
ஆசியாவின் மோசடி வலையமைப்புகளுக்கு இலங்கை ஒரு புதிய தளமாக உருவெடுத்து வருகிறது
Local
09 June 2026