International16 May 2013

பக்தாத்தில் 23 பேர் பலி

 
ஈராக் தலைநகர் பக்தாத்தில் ஷியா முஸ்லிம்கள் வாழும் மாவட்டத்தில் இடம்பெற்ற தொடர் குண்டுத்தாக்குதல்களில் 23 பேர் கொல்லப்பட்டனர்.

ஒரு மணித்தியால இடைவெளிகளில் 11 குண்டுகள் வெடித்துள்ள நிலையில், வடக்கு நகரான கிர்குக்கில் சுமார் 10 பேர் வரை கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த சில வாரங்களாக ஈராக்கில் இனங்களுக்கு இடையிலான வன்முறைகள் அதிகரித்த வண்ணமுள்ளன.

ஏப்ரல் மாதத்தில் மாத்திரம் சுனி, ஷியா முஸ்லிம்களுக்கு இடையிலான முறுகல் நிலை காரணமாக சுமார் 700 பேர் வரை கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Related recommendation
Hiru TV News | Programmes