Lesi Pay ஊடாக ஸ்மார்ட் சாதனங்களை எளிதாகப் பெற்றுக்கொள்ள Dialog Finance – Softlogic Retail கூட்டாண்மை
Dialog Finance பிஎல்சி மற்றும் Softlogic Retail ஆகிய நிறுவனங்கள் மூலோபாயக் கூட்டாண்மையில் இணைந்துள்ளன. இதன் மூலம், Lesi Pay சேவையூடாக ஸ்மார்ட் கையடக்கத் தொலைபேசிகள் உள்ளிட்ட ஸ்மார்ட் சாதனங்களை இலகுவான நிதித் திட்டங்களின் கீழ் கொள்வனவு செய்வதற்கான வாய்ப்பை விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இந்தக் கூட்டாண்மையின் கீழ், வாடிக்கையாளர்கள் Lesi Pay சேவையின் டிஜிட்டல் நிதியுதவி வசதியைப் பயன்படுத்தி, Softlogic நிறுவனத்தின் பங்கேற்கும் விற்பனை நிலையங்கள் மற்றும் காட்சிக்கூடங்களிலிருந்து ஸ்மார்ட் சாதனங்களைக் கொள்வனவு செய்ய முடியும்.இதன் மூலம், இலங்கையர்கள் அத்தியாவசியமான டிஜிட்டல் சாதனங்களை எளிதில் பெற்றுக்கொள்வதுடன், அவற்றைக் கொள்வனவு செய்வதற்கான செலவுகளைத் தமது வசதிக்கேற்ப நிர்வகிக்கும் வாய்ப்பும் கிடைக்கிறது.வாடிக்கையாளர்கள் Dialog Pay செயலி மூலம் விண்ணப்பச் செயல்முறையை ஆரம்பித்து, தமது தகுதியை மின்னணு முறையில் சரிபார்த்த பின்னர், Softlogic நிறுவனத்தின் பங்கேற்கும் விற்பனை நிலையங்களில் கொள்வனவுகளை நிறைவு செய்யலாம்.Lesi Pay திட்டத்தின் கீழ், தகுதியுடைய வாடிக்கையாளர்கள் கடன் அட்டை அல்லது பொறுப்பாளி இன்றி, குறைந்தபட்ச முற்பணத்துடன் 18 மாதங்கள் வரையிலான தவணை முறையில் ஸ்மார்ட் சாதனங்களைக் கொள்வனவு செய்வதற்கான நிதியுதவியைப் பெற்றுக்கொள்ள முடியும். அத்துடன், காகிதமற்ற விண்ணப்பச் செயல்முறையின் மூலம் குறைந்தளவிலான ஆவணங்களுடன் நிதியுதவிக்கு விண்ணப்பிக்கவும் முடியும்.இந்தக் கூட்டாண்மை தொடர்பில் கருத்துத் தெரிவித்த டயலொக் ஆசிஆட்டா பிஎல்சியின் குழுமத் தலைமை டிஜிட்டல் சேவைகள் அதிகாரி ரேணுகா பெர்னாண்டோ, கல்வி, வேலைவாய்ப்பு, நிதி நிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்காகவும் டிஜிட்டல் பொருளாதாரத்தில் பங்கேற்பதற்காகவும் ஸ்மார்ட்போன் அணுகல் அத்தியாவசியமானதாக மாறிவருவதாகக் குறிப்பிட்டார்.Softlogic Retail நிறுவனத்துடனான இந்தக் கூட்டாண்மை, ஸ்மார்ட் சாதனங்களை எளிதாகவும் மலிவாகவும் பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்பை விரிவுபடுத்துவதில் முக்கியமான படியாகும் என்றும், டிஜிட்டல் புத்தாக்கத்தையும் நம்பகமான சில்லறை விற்பனை அனுபவத்தையும் ஒன்றிணைப்பதன் மூலம் அதிகளவிலான இலங்கையர்கள் ஸ்மார்ட் சாதனங்களைச் சொந்தமாக்கிக்கொள்ள உதவ முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.இதேவேளை, Softlogic Holdings PLCயின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரஞ்சன் பெரேரா கருத்துத் தெரிவிக்கையில், இலங்கை நுகர்வோருக்கு முன்னணி தொழில்நுட்பத் தயாரிப்புகளையும் தரமான சில்லறை விற்பனை அனுபவங்களையும் நெருக்கமாகக் கொண்டுசெல்வதில் தமது நிறுவனம் கவனம் செலுத்தி வருவதாகக் குறிப்பிட்டார். Dialog Finance நிறுவனத்துடனான கூட்டாண்மையின் மூலம், வாடிக்கையாளர்கள் தங்களுக்குத் தேவையான ஸ்மார்ட் கையடக்கத் தொலைபேசிகளை நெகிழ்வான நிதித் திட்டங்களின் கீழ் எளிதாகக் கொள்வனவு செய்ய முடியும் என்றும், இது தமது சில்லறை விற்பனைச் சேவைகளை மேலும் வலுப்படுத்தும் என்றும் அவர் தெரிவித்தார்.ஸ்மார்ட் கையடக்க த் தொலைபேசி பயன்பாடு கல்வி, வேலைவாய்ப்பு, தொழில்முனைவு, நிதிச் சேவைகள் மற்றும் அரச, தனியார் டிஜிட்டல் தளங்களை அணுகுதல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்தநிலையில், சாதனங்களைக் கொள்வனவு செய்வதற்கான ஆரம்பக்கட்ட நிதிச் சுமையைக் குறைப்பதன் மூலம், இலங்கையின் வளர்ந்துவரும் டிஜிட்டல் பொருளாதாரத்தில் அதிகளவிலான மக்கள் பங்கேற்பதை ஊக்குவிப்பதே இந்தக் கூட்டாண்மையின் நோக்கமாகும்.Lesi Pay சேவையானது, நாடளாவிய ரீதியில் Dialog Finance பிஎல்சியின் அங்கீகரிக்கப்பட்ட கூட்டாளர் வலையமைப்பு மற்றும் Softlogic Max உள்ளிட்ட Softlogic நிறுவனத்தின் பங்கேற்கும் விற்பனை நிலையங்கள், காட்சிக்கூடங்கள் ஊடாகக் கிடைக்கிறது. வாடிக்கையாளர்கள் Dialog Pay செயலியைப் பதிவிறக்கம் செய்து, டிஜிட்டல் தகுதிச் சரிபார்ப்பை நிறைவு செய்வதன் மூலம் விண்ணப்பச் செயல்முறையை ஆரம்பிக்கலாம்.Dialog Finance பிஎல்சி, இலங்கை நுகர்வோரின் மாறிவரும் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் டிஜிட்டல் தொழில்நுட்பம் சார்ந்த நிதித் தீர்வுகளை வழங்கி வருகிறது. Lesi Pay சேவையானது, காகிதமற்ற விண்ணப்பச் செயல்முறை, நெகிழ்வான மீள்செலுத்தல் தெரிவுகள் மற்றும் விரிவடைந்துவரும் சில்லறை விற்பனைக் கூட்டாளர் வலையமைப்பு ஆகியவற்றின் மூலம் தகுதியுடைய வாடிக்கையாளர்கள் ஸ்மார்ட் சாதனங்களை எளிதாகக் கொள்வனவு செய்வதற்கான வாய்ப்பை வழங்குகிறது.Softlogic Holdings PLC என்பது சில்லறை வர்த்தகம், தகவல் மற்றும் தகவல் தொடர்புத் தொழில்நுட்பம், சுகாதாரம், நிதிச் சேவைகள், வாகனங்கள், ஓய்வு மற்றும் பொழுதுபோக்கு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இயங்கும் இலங்கையின் முன்னணி பன்முக வணிகக் குழுமங்களில் ஒன்றாகும். தனது சில்லறை விற்பனை வலையமைப்பு மற்றும் சர்வதேச வர்த்தக நாமங்களின் ஊடாக, நாடு முழுவதும் உள்ள நுகர்வோருக்குப் பல்வேறு தொழில்நுட்பத் தயாரிப்புகளையும் சேவைகளையும் வழங்கி வருகிறது.Softlogic Holdings PLC என்பது சில்லறை வர்த்தகம், தகவல் மற்றும் தகவல் தொடர்புத் தொழில்நுட்பம், சுகாதாரம், நிதிச் சேவைகள், வாகனங்கள், ஓய்வு மற்றும் பொழுதுபோக்கு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இயங்கும் இலங்கையின் முன்னணி பன்முக வணிகக் குழுமங்களில் ஒன்றாகும். தனது சில்லறை விற்பனை வலையமைப்பு மற்றும் சர்வதேச வர்த்தக நாமங்களின் ஊடாக, நாடு முழுவதும் உள்ள நுகர்வோருக்குப் பல்வேறு தொழில்நுட்பத் தயாரிப்புகளையும் சேவைகளையும் வழங்கி வருகிறது.