General12 May 2026

காலியில் சட்டவிரோத இணையவழி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 198 வெளிநாட்டவர்கள் கைது

காலி மாவட்டத்தில் சட்டவிரோத இணையவழி நடவடிக்கைகளில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 198 வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது

காலி - கல்வடுகொட காவல்துறையினரால் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையில், விடுதி ஒன்றில் தங்கியிருந்த 110 இந்திய பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன், காலி - ஹிக்கடுவை பகுதியில் உள்ள சுற்றுலா விடுதி ஒன்றில் முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போது, 55 வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதேநேரம், மிதிகம பகுதியில் உள்ள சுற்றுலா விடுதி ஒன்றில் தங்கியிருந்த 28 இந்திய பிரஜைகளும், 05 நேபாள பிரஜைகளும் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது
Related recommendation
Hiru TV News | Programmes