பெண் ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட தேசிய மக்கள் சக்தியின் பசறை பிரதேச சபை உப தவிசாளர் மற்றும் அவரது மகன் ஆகியோரை தலா 2 இலட்சம் ரூபாய் சரீரப் பிணையில் செல்ல பசறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பசறை, எல்டப் பகுதியில் கடந்த மாதம் 30ஆம் திகதி இரவு இரு குழுக்களுக்கிடையே ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது, பெண் ஒருவர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் இவர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
இதன்படி, 51 வயதுடைய தேசிய மக்கள் சக்தியின் பசறை பிரதேச சபை உப தவிசாளர் சின்னையா நவராஜ் மற்றும் அவரது 24 வயதுடைய மகன் ஆகியோர் என காவல்துறையினர் தெரிவித்தனர்.
கடந்த 30ஆம் திகதி இடம்பெற்ற இச்சம்பவத்தின் போது காயமடைந்த உப தவிசாளரும் அவரது மனைவியும் அன்றைய தினம் இரவே பசறை ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர்.
பின்னர் உப தவிசாளர் மேலதிக சிகிச்சைக்காக பதுளை பொது மருத்துவமனைக்கு மாற்றப்பட்டிருந்தார்.
இச்சம்பவம் குறித்து இரு தரப்பிலிருந்தும் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளின் அடிப்படையில், பசறை காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணைகளை அடுத்தே இவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர்.
பசறைகாவல்துறையினர் இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Latest News
சுரேஷ் சலே மனிதாபிமானமற்ற முறையில் நடத்தப்படுகிறார்: நாடாளுமன்றக் குழுவை அனுப்ப ஐக்கிய தேசியக் கட்சி கோரிக்கை!
Local
09 June 2026
அதிகரிப்பை பதிவு செய்த கொழும்பு பங்குச் சந்தை
Local
09 June 2026
சுரேஷ் சலேயின் மனைவி ஊடகங்களில் தோன்றுவது கோட்டாபயவின் ஆட்சிக் காலத்தை நினைவூட்டுகிறது: முஜிபுர் ரஹ்மான்
Local
09 June 2026
டிட்வா' சூறாவளிக்கு முன்னரே முடக்கப்பட்ட இந்திய வீட்டுத்திட்டம்: மலையக மக்களின் நலனைப் புறக்கணித்ததா புதிய அரசு?
Local
09 June 2026
பெருந்தோட்ட முதலீட்டு மோசடிகள் குறித்து இலங்கை மத்திய வங்கி அவசர எச்சரிக்கை!
Local
09 June 2026
அவசரகால நிலை நீடிப்புக்கு நாடாளுமன்றம் அனுமதி!
Local
09 June 2026
சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையின் இலச்சினையை வெளியிட்டார் தமிழக முதல்வர்
Local
09 June 2026
"ஜே.வி.பி-யின் தேர்தல் மேடைப் பாடல்களுக்கு ஒரு நீதி, கிளிநொச்சி இளைஞருக்கு ஒரு நீதியா?"
Local
09 June 2026
'AK 64' படத்திற்காக ரூ.187 கோடி வேதனம்? : அஜித்தின் அதிரடி கண்டிஷன்!
Local
09 June 2026
"அரசாங்கம் கவிழப்போவது தெரிந்தும் கூச்சலிடும் கோமாளிகள்..!"
Local
09 June 2026