டிட்வா சூறாவளிக்கு முன்னரே இந்திய வீடமைப்பு திட்டம் முடக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் குற்றஞ்சாட்டியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய போதே அவர் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
2024 மற்றும் 2025ஆம் ஆண்டுகளில் தலா 4,500 வீடுகள் வீதம் மொத்தம் 9,000 வீடுகள் கட்டி முடிக்கப்படும் என உறுதியளிக்கப்பட்ட போதிலும், மலையகத்தில் இதுவரை ஒரு வீடு கூட முழுமையாகக் கட்டி முடிக்கப்படவில்லை.
2025 டிட்வா' (Dithwa) சூறாவளிப் பாதிப்புக்கு முன்னர், மலையகத்தில் இடைநிறுத்தப்பட்டிருந்த இந்திய வீட்டுத்திட்டத்தின் கீழ் 1,300 வீடுகளை அமைப்பதற்கான ஒப்புதல்கள் வழங்கப்பட்டு, ஆட்சி மாற்றத்தின் பின்னர் "இது முந்தைய அமைச்சரால் கொண்டுவரப்பட்டது" என்ற காரணத்திற்காக பயனாளிகள் மாற்றப்பட்டு, அத்திட்டம் திட்டமிட்டே கைவிடப்பட்டது.
ஆரம்பத்தில் 9 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாயாக இருந்த ஒரு வீட்டின் (550 சதுர அடி) மதிப்பீடு, பொருளாதார நெருக்கடி மற்றும் இந்திய அரசுடனான கலந்துரையாடல்களுக்குப் பின்னர் 28 இலட்சம் ரூபாய் வரை அதிகரிக்கப்பட்ட போதிலும், கட்டுமானப் பணிகள் முறையாக முன்னெடுக்கப்படவில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Latest News
காவல்துறை விசேட நடவடிக்கையில் 10 பேர் கைது: ஆபத்தான பொருட்கள் மீட்பு!
Local
09 June 2026
பயங்கரவாத தடைச் சட்டம் முற்றாக ஒழிக்கப்படும் - பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர்
Local
09 June 2026
லங்கா சதொச ஊடாக 18 அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைக்க தீர்மானம்
Local
09 June 2026
ஆசியாவின் மோசடி வலையமைப்புகளுக்கு இலங்கை ஒரு புதிய தளமாக உருவெடுத்து வருகிறது
Local
09 June 2026
காலி மாநகரசபை எல்லைக்குட்பட்ட பகுதிகளுக்கு நாளை 14 மணித்தியால நீர்வெட்டு
Local
09 June 2026
சுரேஷ் சலே மனிதாபிமானமற்ற முறையில் நடத்தப்படுகிறார்: நாடாளுமன்றக் குழுவை அனுப்ப ஐக்கிய தேசியக் கட்சி கோரிக்கை!
Local
09 June 2026
அதிகரிப்பை பதிவு செய்த கொழும்பு பங்குச் சந்தை
Local
09 June 2026
சுரேஷ் சலேயின் மனைவி ஊடகங்களில் தோன்றுவது கோட்டாபயவின் ஆட்சிக் காலத்தை நினைவூட்டுகிறது: முஜிபுர் ரஹ்மான்
Local
09 June 2026
டிட்வா' சூறாவளிக்கு முன்னரே முடக்கப்பட்ட இந்திய வீட்டுத்திட்டம்: மலையக மக்களின் நலனைப் புறக்கணித்ததா புதிய அரசு?
Local
09 June 2026
அவசரகால நிலை நீடிப்புக்கு நாடாளுமன்றம் அனுமதி!
Local
09 June 2026