General09 June 2026

காலி மாநகரசபை எல்லைக்குட்பட்ட பகுதிகளுக்கு நாளை 14 மணித்தியால நீர்வெட்டு

வக்வெல்ல நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் மேற்கொள்ளப்படவுள்ள அத்தியாவசிய பராமரிப்புப் பணிகள் காரணமாக, நாளை (10) காலி மாநகரசபை அதிகாரப் பிரதேசத்திற்குட்பட்ட பகுதிகளில் 14 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் முழுமையாக நிறுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.

இதன்படி, நாளை முற்பகல் 9:00 மணி முதல் அன்றைய தினம் இரவு 11:00 மணி வரை இந்த நீர்வெட்டு அமலில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நீர் விநியோகத் தடையினால் காலி மாநகரசபை எல்லைக்குள் வசிக்கும் நுகர்வோருக்கு ஏற்படும் அசௌகரியங்களுக்கு தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தனது வருத்தத்தைத் தெரிவித்துக் கொண்டுள்ளது
Related recommendation
Hiru TV News | Programmes