Meta நிறுவனத்துடனும் அதன் சமூக ஊடகத் தளங்களுடனும் நீண்டகாலமாக கருத்து வேறுபாடுகளை வெளிப்படுத்தி வரும் எலான் மஸ்க் , Instagram தொடர்பில் மீண்டும் சர்ச்சைக்குரிய கருத்தொன்றை வெளியிட்டுள்ளார்.
ஒக்டோபர் முதலாம் திகதி X சமூக ஊடகத்தில் வெளியான பதிவொன்றுக்கு பதிலளித்த எலான் மஸ்க் , “Instagram is for girls” என குறிப்பிட்டுள்ளார்.
Geiger Capital நிறுவனம் தனது Instagram கணக்கை அதிகாரப்பூர்வமாக நீக்கியுள்ளதாகவும், Instagram இயல்பாகவே பெண்களுக்கான செயலி எனவும் குறிப்பிட்டு வெளியிட்ட பதிவுக்கே மஸ்க் இந்தப் பதிலை வழங்கியுள்ளார்.
மஸ்கின் இந்தக் கருத்து X சமூக ஊடகத்தில் பரவலாகப் பகிரப்பட்டுள்ளதுடன், ஆயிரக்கணக்கான பயனர்கள் அதற்கு பதிலளித்துள்ளனர்.
இதேவேளை, Instagram தொடர்பில் எலான் மஸ்க் இவ்வாறான கருத்தை வெளியிடுவது இது முதல் முறையல்ல என தெரிவிக்கப்படுகிறது.
கடந்த மே மாதத்திலும் சமூக ஊடகப் பயன்பாடு தொடர்பான கலந்துரையாடலின்போது, “Instagram is for girls” என மஸ்க் குறிப்பிட்டிருந்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன.
அவரது அந்தக் கருத்துகளுக்கு அப்போதும் சமூக ஊடகங்களில் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டிருந்ததுடன், சமூக ஊடகப் பயன்பாடு மற்றும் பாலின அடிப்படையிலான பொதுமைப்படுத்தல்கள் தொடர்பில் விவாதங்கள் இடம்பெற்றிருந்தன.
Latest News
10 நாட்களில் 260 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூலித்த சூர்யாவின் 'சீன்'
Local
17 November 2026
ஆன்மிகப் பேச்சாளரை கரம்பிடித்தார் நடிகை மிருணாளினி ரவி: மலேசியாவில் திருமணம்!
Local
17 November 2026
பன்றிக்காக விவாகரத்து செய்த பெண்: அமெரிக்காவில் அதிர்ச்சி சம்பவம்!
Local
16 November 2026
தெற்காசியாவில் மிகக் குறைந்த தாய்மார்கள் இறப்பு விகிதம்: இலங்கை சாதனை!
Local
16 November 2026
தென்னாப்பிரிக்காவில் இருவேறு துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் – 17 பேர் உயிரிழப்பு!
Local
16 November 2026
சீன - ரஷ்ய வர்த்தகக் கூட்டும் சிதறும் மேற்குலக ஒற்றுமையும்! புதிய புவிசார் அரசியல் ஒழுங்கின் விளிம்பில் உலகம்!
Local
16 November 2026
ஐரோப்பிய சந்தையில் வீழ்ச்சியடைந்தது பங்களாதேஷின் ஆடை ஏற்றுமதி!
Local
16 November 2026
ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்தில் நடிக்கும் புதிய நடிகராக ரொபர்ட் பாட்டின்சன் அறிவிப்பு!
Local
16 November 2026
இலங்கையில் கிரிப்டோ நாணயங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் : தனி ஒழுங்குமுறை ஆணையம் அமைக்க அரசாங்கம் நடவடிக்கை!
Local
16 November 2026
கொடூரத்திற்குப் பின்னும் மனம் தளரா பெண் : போதைக்கு அடிமையான இளைஞர்களின் செயல்!
Local
16 November 2026