எரிபொருள் போக்குவரத்துக்காக செலுத்தப்படும் கட்டணத்தை 20 சதவீதத்தால் அதிகரிக்குமாறு நேற்று (02) நடைபெற்ற கலந்துரையாடலின்போது கோரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், 15 சதவீத கட்டண அதிகரிப்பை வழங்க இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் இணக்கம் தெரிவித்துள்ளதாக அகில இலங்கை பெற்றோலிய தனியார் தாங்கி வாகன உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
எனினும், இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் முன்வைத்துள்ள கட்டண அதிகரிப்பு முறைமை தொடர்பில் ஆய்வு செய்வதற்காக எதிர்வரும் 5ஆம் திகதி வரை கால அவகாசம் பெற்றுள்ளதாக அந்த சங்கத்தின் செயலாளர் டி.வி. சாந்த சில்வா தெரிவித்துள்ளார்.
டீசல், டயர்கள், மின்கலங்கள், பராமரிப்புச் செலவுகள் மற்றும் ஊழியர்களின் வேதனம் உள்ளிட்ட தொழிலை நடத்துவதற்கான செலவுகளைக் கருத்திற்கொண்டு, எரிபொருள் போக்குவரத்துக்கான கட்டணத்தை அதிகரிக்குமாறு தனியார் தாங்கி வாகன உரிமையாளர்கள் அரசாங்கத்திடம் முன்னதாக கோரிக்கை விடுத்திருந்தனர்.
அத்துடன், போக்குவரத்துக் கட்டணத்தை நிர்ணயிக்கும் விலைச் சூத்திரத்தையும் அதற்கேற்ப திருத்துமாறும் அவர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
தமது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால், எரிபொருள் விநியோகப் பணிகளில் இருந்து விலக நேரிடும் எனவும் தனியார் தாங்கி வாகன உரிமையாளர்கள் முன்னதாக எச்சரிக்கை விடுத்திருந்தனர்.
இந்தப் பின்னணியிலேயே, தனியார் தாங்கி வாகன உரிமையாளர்கள் சங்கத்தின் பிரதிநிதிகளுக்கும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவருக்கும் இடையில் நேற்று இந்தக் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
Latest News
10 நாட்களில் 260 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூலித்த சூர்யாவின் 'சீன்'
Local
17 November 2026
ஆன்மிகப் பேச்சாளரை கரம்பிடித்தார் நடிகை மிருணாளினி ரவி: மலேசியாவில் திருமணம்!
Local
17 November 2026
பன்றிக்காக விவாகரத்து செய்த பெண்: அமெரிக்காவில் அதிர்ச்சி சம்பவம்!
Local
16 November 2026
தெற்காசியாவில் மிகக் குறைந்த தாய்மார்கள் இறப்பு விகிதம்: இலங்கை சாதனை!
Local
16 November 2026
தென்னாப்பிரிக்காவில் இருவேறு துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் – 17 பேர் உயிரிழப்பு!
Local
16 November 2026
சீன - ரஷ்ய வர்த்தகக் கூட்டும் சிதறும் மேற்குலக ஒற்றுமையும்! புதிய புவிசார் அரசியல் ஒழுங்கின் விளிம்பில் உலகம்!
Local
16 November 2026
ஐரோப்பிய சந்தையில் வீழ்ச்சியடைந்தது பங்களாதேஷின் ஆடை ஏற்றுமதி!
Local
16 November 2026
ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்தில் நடிக்கும் புதிய நடிகராக ரொபர்ட் பாட்டின்சன் அறிவிப்பு!
Local
16 November 2026
இலங்கையில் கிரிப்டோ நாணயங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் : தனி ஒழுங்குமுறை ஆணையம் அமைக்க அரசாங்கம் நடவடிக்கை!
Local
16 November 2026
கொடூரத்திற்குப் பின்னும் மனம் தளரா பெண் : போதைக்கு அடிமையான இளைஞர்களின் செயல்!
Local
16 November 2026