அஹுங்கல்ல காவல்துறை எல்லைக்குட்பட்ட கல்வெஹெர பகுதியில், இன்று (04) அதிகாலை வீட்டினுள் இருந்த நபர் ஒருவரை இலக்கு வைத்து நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுவைச் சேர்ந்த 'லொக்கு பெட்டி' தரப்பினரால் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.
இந்த துப்பாக்கிச்சூட்டின் உண்மையான இலக்கு காயமடைந்த நபரின் மகனாக இருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை,லொக்கு பெட்டியின் சகோதரன் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுக்கு பழிவாங்கும் நடவடிக்கையாகவே இது முன்னெடுக்கப்பட்டிருக்கலாம் எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கரந்தெனிய சுத்தா மற்றும் கொஸ்கொட சுஜி தரப்பைச் சேர்ந்த 5 பேர் மீது தாக்குதல் நடத்துவதற்கு லொக்கு பெட்டி தரப்பு திட்டமிட்டுள்ளதாக வலான ஊழல் தடுப்புப் பிரிவினருக்கு இரகசியத் தகவல் கிடைத்தது.
அதனடிப்படையில் கொஸ்கொட பகுதியில் உள்ள வீடொன்றை முற்றுகையிட்ட காவல்துறை சிறப்புப் படையினர் மீது சந்தேகநபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
பதில் தாக்குதலில் சந்தேகநபரொருவரின் காலில் சுட்டு அவரைக் கைது செய்த காவல்துறையினர், மற்றொருவரையும் கைது செய்தனர்.
அங்கிருந்து தப்பிச் சென்ற மூன்றாவது சந்தேகநபரே இந்த அஹுங்கல்ல துப்பாக்கிச்சூட்டை நடத்தியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
இதேவேளை,கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து கைக்குண்டு மீட்கப்பட்டதுடன், சம்பவத்தின் போது அவரது கைபேசிக்கு துபாயில் இருந்து அழைப்பு வந்துள்ளதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவத்துடன், நடப்பு ஆண்டில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுக்களால் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடுகளின் எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளதுடன், அவற்றில் 26 பேர் உயிரிழந்துள்ளதுடன் 16 பேர் காயமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest News
புத்தகக் கடைகளில் திரளும் கூட்டம் – என்ன ஸ்பெஷல் சோனியாவின் நூலில்?
Local
12 November 2026
அநுரவின் நான்கு மணித்தியால பாதீட்டு உரை - அதிகப்படியான விதப்புரைகளும், உறுதி மொழிகளும்
Local
12 November 2026
PAYE வரி விலக்கு வரம்பை ரூ. 162,500 ஆக உயர்த்தத் திட்டம்
Local
12 November 2026
வீதிகள் அபிவிருத்திக்காக 487 பில்லியன் ரூபாய் ஒதுக்கீடு!
Local
12 November 2026
2027 பாதீட்டு திட்டத்தை முன்னிட்டு நாடாளுமன்ற வளாகத்தில் ஒன்றுகூடும் ஆளும் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள்
Local
12 November 2026
திருமண வரவேற்பில் முன்னாள் எதிரியைச் சந்திக்கத் தயங்கும் 'நம்பர் நடிகை'!
Local
12 November 2026
1.3 ட்ரில்லியன் டொலர் மதிப்பில் பங்குச்சந்தையில் களமிறங்கும் Claude AI நிறுவனம்!
Local
12 November 2026
ஹேகார்ப் நிறுவனத்தின் ஆறு மாத வருமானம் ரூ.40.6 பில்லியன் – வரிக்கு முந்தைய இலாபம் 75 சதவீதத்தால் அதிகரிப்பு!
Local
12 November 2026
போலி சாரதி அனுமதிப்பத்திரங்களுடன் இருவர் அதிரடியாக கைது!
Local
12 November 2026
கிராமப்புறங்களில் இலவச மருத்துவ முகாம்களை நடத்திய மருத்துவர் காலமானார்
Local
12 November 2026