International04 October 2026

யுக்ரைன் தலைநகர் கீவ் மீதான தாக்குதலை தீவிரப்படுத்தியது ரஷ்யா: 4 ஆவது நாளாக ஆளில்லா வானூர்தி தாக்குதல்!

யுக்ரைன் தலைநகர் கீவில் உள்ள முக்கிய பாலங்களை இலக்கு வைத்து, ரஷ்யா தொடர்ந்து 4 ஆவது நாளாக ஆளில்லா வானூர்தி தாக்குதல்களை மேற்கொண்டு வருகிறது.

இன்று (04) காலை 'பிவ்னிச்னி' (Pivnichnyi - வடக்குப் பாலம்) பாலம் மீது நடத்தப்பட்ட ஆளில்லா வானூர்தி தாக்குதலில் இருவர் காயமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த பாலத்தின் மீது தொடர்ந்து இரண்டாவது நாளாக தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதோடு, இந்த வார தொடக்கத்தில் 'பிவ்டெனி' (Pivdennyi - தெற்குப் பாலம்) பாலம் மீதும் பலமுறை தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன.

ஜேர்மன் சான்ஸலர் ஃப்ரீட்ரிச் மெர்ஸ் (Friedrich Merz), ரஷ்யாவின் ஆக்கிரமிப்புக்கு எதிராக யுக்ரைனுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் அவசர விஜயமொன்றை மேற்கொண்டு கீவ் நகருக்கு வருகை தந்துள்ள நிலையிலேயே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இதற்கிடையில், கீவ் உட்பட யுக்ரைனின் ஏனைய பகுதிகள் மீதான தாக்குதல்களை மேலும் தீவிரப்படுத்தப்போவதாக ரஷ்ய இராணுவம் அறிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவிக்கின்றன.
Related recommendation
Hiru TV News | Programmes