General05 October 2026

இன்று உலக வாழ்விட தினம்

உலக வாழ்விட தினம் இன்று (5) “அனைவருக்கும் போதுமான வீடுகள்” என்ற தொனிப்பொருளில் அனுஷ்டிக்கப்படுகிறது.

உலகளாவிய வீட்டு வசதி நெருக்கடி, இடம்பெயர்ந்த மக்களின் பிரச்சினைகள் மற்றும் குறைந்த வருமானம் பெறுவோர், வீடற்றவர்களுக்கு பாதுகாப்பான வீடுகளை வழங்குவதன் அவசியம் குறித்து இம்முறை கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

உலகளவில் 300 கோடிக்கும் அதிகமான மக்கள் போதிய வசதிகளற்ற வீடுகளில் வசிப்பதாகவும், 110 கோடிக்கும் அதிகமானோருக்கு நிரந்தர வசிப்பிடம் இல்லை என்றும் ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

இந்தநிலையில், உலக வாழ்விட தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் 5,000 வீடுகளை மக்களிடம் கையளிக்கும் விசேட திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக வீடமைப்பு, நிர்மாணம் மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் சுசில் ரணசிங்க தெரிவித்துள்ளார்.
Related recommendation
Hiru TV News | Programmes