Entertainment05 October 2026

திரையரங்கில் 'மண்டாடி' வசூல் வேட்டை: ரூ. 150 கோடியைக் கடந்து அசத்தல்!

நடிகர் சூரியின் மண்டாடி திரைப்படம் திரையரங்குகளில் 25-வது நாளை நிறைவு செய்து அசத்தியுள்ளது.

நடிகர் சூரியின் மண்டாடி திரைப்படம் இதுவரை ரூ. 150 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கடந்த செப்டெம்பர் 10 ஆம் திகதி திரையரங்குகளில் மண்டாடி திரைப்படம் வெளியானது.

நல்ல கதைக்களங்களுக்கு தமிழ் சினிமாவில் எப்போதும் வரவேற்பு இருக்கும் என்பதை நிரூபிக்கும் விதமாக மண்டாடிக்கு அசத்தலான வணிகம் நடைபெற்று வருகிறது.

தற்போது, திரையரங்குகளில் 25 ஆவது நாளை நிறைவு செய்ததுடன் 4 ஆவது வாரத்திலும் ஹவுஸ்ஃபுல் காட்சிகளாகத் திரையிடப்பட்டு வருகிறது.

இதுவரை தமிழகத்திலேயே ரூ. 100 கோடி வசூலை நெருங்கியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Related recommendation
Hiru TV News | Programmes