General05 October 2026

கலகொட-அத்தே ஞானசார தேரரின் எஞ்சிய தண்டனை காலத்தை அமுல்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு

நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டில் குற்றவாளியான பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட-அத்தே ஞானசார தேரரின் எஞ்சிய தண்டனைக் காலப்பகுதியையும் அமுல்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதற்கமைய, முன்னதாக விதிக்கப்பட்ட 6 வருட கடூழிய சிறைத் தண்டனையில் எஞ்சி இருக்க கூடிய 5 வருடங்களையும் மீள தண்டனைக் காலமாக உறுதிப்படுத்தி மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, அவருக்கான எஞ்சிய தண்டனைக் காலப்பகுதியை அமுல்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு, சிறைச்சாலைகள் ஆணையாளருக்கு மேன்முறையீட்டு நீதிமன்ற ஆயம் உத்தரவிட்டுள்ளது.
Related recommendation
Hiru TV News | Programmes