General05 October 2026

களுத்துறை மாவட்டத்தில் இரு குடும்பங்களுக்கு புதிய வீடுகள் கையளிப்பு

“தனக்கென ஒரு இடம் – அழகான வாழ்க்கை” தேசிய வீடமைப்புத் திட்டத்தின் கீழ் களுத்துறை மாவட்டத்தில் நிர்மாணிக்கப்பட்ட இரண்டு புதிய வீடுகள்,சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தலைமையில் நேற்று (4) பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டன.

மில்லனிய, கெலஸ்கம பகுதியைச் சேர்ந்த ஏ. குணவர்தன மற்றும் ஹொரணை, கும்புக்க பகுதியைச் சேர்ந்த தரங்க பிரியதர்ஷனி ஆகியோருக்கு இந்த வீடுகள் வழங்கப்பட்டன.

குறைந்த வருமானம் கொண்ட வீடற்ற குடும்பங்களுக்கு நிரந்தர வீட்டு உரிமையை பெற்றுக்கொடுக்கும் நோக்கில் இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையுடன் இணைந்து களுத்துறை மாவட்டத்தில் 685 வீடுகளை நிர்மாணிக்க திட்டமிடப்பட்டுள்ளதுடன், இதுவரை 365 குடும்பங்களுக்கு 365 மில்லியன் ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.

மேலும், உலக வாழ்விட தினத்தை முன்னிட்டு அரசாங்க நிதியுதவியுடன் நிர்மாணிக்கப்பட்ட 5,000 வீடுகளை மக்களிடம் கையளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
Related recommendation
Hiru TV News | Programmes