General05 October 2026

அதிவேக நெடுஞ்சாலைகளில் ஆசனப்பட்டி அணியாத 3,000 பேருக்கு எதிராக காவல்துறை நடவடிக்கை!

அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணம் செய்யும் போது புதிய ஆசனப்பட்டி பாதுகாப்பு விதிமுறைகளை மீறிச் செயற்பட்ட 3,000 பேருக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.

சாரதிகள் மற்றும் பயணிகளில் பெரும்பாலானோர் இந்தச் சட்டத்திற்கு அமைவாகச் செயல்பட்ட போதிலும், சிலர் தொடர்ந்தும் விதிமுறைகளை மீறி வருவதாகக் போக்குவரத்துக் கட்டுப்பாடு மற்றும் வீதிப் பாதுகாப்புப் பொறுப்பதிகாரியும், பிரதி காவல்துறை மா அதிபருமான டபிள்யூ.பி.ஜே. சேனாதீர தெரிவித்துள்ளார்.

அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகனங்களில் செல்லும் அனைத்துப் பயணிகளும் ஆசனப்பட்டி அணிவது செப்டம்பர் 19ஆம் திகதி முதல் கட்டாயமாக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related recommendation
Hiru TV News | Programmes