General05 October 2026

முன்னாள் அமைச்சர் குமார ஜயகொடி மீதான வழக்கு நவம்பர் 3ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு!

முன்னாள் அமைச்சர் குமார ஜயகொடி தொடர்பில் கையூட்டல் அல்லது ஊழல் குற்றச்சாட்டின் அடிப்படையில் கையூட்டல் அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் மேலதிக சாட்சியப் பதிவை நவம்பர் 3ஆம் திகதி நடத்த கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து, வழக்கின் மேலதிக சாட்சியப் பதிவை நவம்பர் 3ஆம் திகதிக்கு ஒத்திவைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
Related recommendation
Hiru TV News | Programmes