General05 October 2026

திலீபனின் சிலையை நினைவாலயத்தில் மீள நிறுவுமாறு வலியுறுத்தி இலண்டனில் கவனயீர்ப்பு போராட்டம்!

திலீபனின் சிலையை, நினைவாலயத்தில் மீள நிறுவுமாறு வலியுறுத்தி இலண்டனில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

பிரித்தானிய பிரதமரின் அலுவலகத்துக்கு முன்பாக இந்த போராட்டம் நடைபெற்றுள்ளது.

பிரித்தானியாவாழ் இலங்கையர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த போராட்டத்தில் பெருந்திரளானவர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

திலீபனின் நினைவு தினத்திற்கு மறுநாள் நினைவாலயத்திலிருந்து அவருடைய சிலை அகற்றப்பட்டமைக்கு இதன் போது எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் திலீபனின் சிலையை மீண்டும் அதே இடத்தில் நிறுவுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பிரித்தானியாவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் இலங்கை அரசாங்கத்திற்கு பிரித்தானிய அரசாங்கம் அழுத்தம் கொடுக்க வேண்டும் எனவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அத்துடன் இலங்கை வாழ் தமிழர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைக்கு, அரசாங்கத்திடமிருந்து உரிய பதிலை விரைவில் பெற்றுக் கொடுக்க பிரித்தானிய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related recommendation
Hiru TV News | Programmes