சிறையில் அடைக்கப்பட்டுள்ள கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு கைதி இலக்கம் வழங்கப்பட்டுள்ளதுடன், ஏனைய கைதிகளுக்கு வழங்கப்படும் சிறைச்சாலை உடையும் வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் சேனக பல்லேதென்ன தெரிவித்துள்ளார்.
இன்று (05) பிற்பகல் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், ஞானசார தேரரின் காவி உடை அகற்றப்பட்டு, சிறைச்சாலை கைதிகளுக்கான உடை அணிவிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.
அத்துடன், ஞானசார தேரர் ஏனைய சாதாரண கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறைச்சாலை அறையிலேயே தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட ஞானசார தேரருக்கு விதிக்கப்பட்டிருந்த சிறைத்தண்டனையின் எஞ்சிய காலத்தை அமுல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.
கைது செய்வதற்காக திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த ஞானசார தேரரை, சிறைச்சாலை அதிகாரிகள் இன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியதைத் தொடர்ந்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதன்போது முன்வைக்கப்பட்ட விடயங்களைப் பரிசீலித்த நீதிபதிகள் குழாம், ஞானசார தேரருக்கு விதிக்கப்பட்டுள்ள சிறைத்தண்டனையின் எஞ்சிய காலத்தை அமுல்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்திற்கு உத்தரவிட்டுள்ளது.
Latest News
உலகளவில் ரூ.1,200 கோடியைக் கடந்தது ‘ராமாயணா’ திரைப்படம்!
Local
16 November 2026
'விஜய் செய்ததை நீங்களும் செய்யாதீர்கள்' - தனுஷுக்கு சாய்பல்லவி கோரிக்கை!
Local
15 November 2026
பெண்களுக்கு எதிரான வன்முறைகளைக் கண்டித்து ஆண்கள் போராட்டம்!
Local
15 November 2026
அரோகரா கோஷம் முழங்க வத்தளையில் சூரசம்ஹாரம்!
Local
15 November 2026
25 வாரக் கருவுக்கு அறுவை சிகிச்சை: இந்திய மருத்துவர்களின் புதிய சாதனை!
Local
15 November 2026
எதிர்வரும் ஜனவரி வரை இசையமைக்க மாட்டேன்!.. அனிருத்தின் முடிவால் அதிர்ச்சியில் இயக்குநர்கள்!
Local
15 November 2026
அடுத்த ஆண்டு சீனாவில் வெளியாகிறது ‘ராமாயணா’ திரைப்படம்!
Local
15 November 2026
இறக்குமதி விபரங்கள் இல்லாமல் தொலைபேசி விற்பனை – நிறுவனத்திற்கு அபராதம்!
Local
15 November 2026
வைரலாகும் ஜெனிலியாவின் 5 பைசா தோடு.. விலை 2 லட்சம் ரூபாய்!
Local
15 November 2026
இந்தியாவில் வாழ்ந்த ராட்சத யானைகள் – அழிவுக்கான காரணம் என்ன?
Local
15 November 2026