அரசாங்கம் முன்னெடுத்துள்ள நடவடிக்கைகளின் காரணமாக, நாட்டின் நிதியியல் அறிவுத்திறன் 35 சதவீதத்திலிருந்து 58 சதவீதமாக அதிகரித்துள்ளதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
கொழும்பு உலக வர்த்தக மையத்தில் இன்று (05) நடைபெற்ற கொழும்பு பங்குச் சந்தையின் 40ஆவது ஆண்டு நிறைவு நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு குடிமகனும் தாம் ஈட்டும் வருமானத்தை முறையாக நிர்வகித்தல், சேமித்தல், நிதி அபாயங்களை அடையாளம் கண்டு முதலீடு செய்தல் மற்றும் மோசடியான நிதி நடவடிக்கைகளில் சிக்காமல் இருப்பதற்கான அறிவைப் பெற்றிருப்பதை உறுதி செய்வதே அரசாங்கத்தின் நோக்கம் என பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பாக, பாடசாலை மாணவர்களின் நிதியியல் அறிவை மேம்படுத்தும் வகையில், புதிய பாடத்திட்டத் திருத்தங்களின் கீழ் 6ஆம் தரம் முதல் 9ஆம் தரம் வரையான மாணவர்களுக்கு தொழில்முனைவோர் மற்றும் நிதியியல் அறிவு என்ற புதிய பாடத்துறையை அறிமுகப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், இன்று அறிமுகப்படுத்தப்பட்ட Stock Market Game திட்டம் மற்றும் பாடசாலை மூலதனச் சந்தை சங்கங்கள் போன்ற நடைமுறை சார்ந்த திட்டங்கள் ஊடாக, சிறுவயதிலிருந்தே மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு தொழில்முனைவோர் செயற்பாடுகள் மற்றும் முதலீடு தொடர்பான சரியான புரிதலை வழங்க முடியும் என பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாடு முழுவதும் கொழும்பு பங்குச் சந்தையின் கிளைகளை 13 ஆக விரிவுபடுத்தி, மக்களிடையே நிதியியல் அறிவை மேம்படுத்துவதற்காக முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளையும் அரசாங்கம் பாராட்டுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
பாரம்பரிய சேமிப்பு முறைகளுக்கு அப்பால் சென்று, நாட்டின் மூலதனச் சந்தையை வலுப்படுத்துவதுடன், இளைஞர்களுக்கான புதிய முதலீட்டு வாய்ப்புகளை உருவாக்குவதற்கும் அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருவதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய மேலும் தெரிவித்துள்ளார்.
Latest News
உலகளவில் ரூ.1,200 கோடியைக் கடந்தது ‘ராமாயணா’ திரைப்படம்!
Local
16 November 2026
'விஜய் செய்ததை நீங்களும் செய்யாதீர்கள்' - தனுஷுக்கு சாய்பல்லவி கோரிக்கை!
Local
15 November 2026
பெண்களுக்கு எதிரான வன்முறைகளைக் கண்டித்து ஆண்கள் போராட்டம்!
Local
15 November 2026
அரோகரா கோஷம் முழங்க வத்தளையில் சூரசம்ஹாரம்!
Local
15 November 2026
25 வாரக் கருவுக்கு அறுவை சிகிச்சை: இந்திய மருத்துவர்களின் புதிய சாதனை!
Local
15 November 2026
எதிர்வரும் ஜனவரி வரை இசையமைக்க மாட்டேன்!.. அனிருத்தின் முடிவால் அதிர்ச்சியில் இயக்குநர்கள்!
Local
15 November 2026
அடுத்த ஆண்டு சீனாவில் வெளியாகிறது ‘ராமாயணா’ திரைப்படம்!
Local
15 November 2026
இறக்குமதி விபரங்கள் இல்லாமல் தொலைபேசி விற்பனை – நிறுவனத்திற்கு அபராதம்!
Local
15 November 2026
வைரலாகும் ஜெனிலியாவின் 5 பைசா தோடு.. விலை 2 லட்சம் ரூபாய்!
Local
15 November 2026
இந்தியாவில் வாழ்ந்த ராட்சத யானைகள் – அழிவுக்கான காரணம் என்ன?
Local
15 November 2026