General05 October 2026

ருஹுணு பல்கலைக்கழக விவசாய பீடத்தில் காய்ச்சல் பரவல் – கற்றல் நடவடிக்கைகள் இணையவழிக்கு மாற்றம்

ருஹுணு பல்கலைக்கழகத்தின் விவசாய பீடத்தில் மாணவர்களிடையே காய்ச்சல் வேகமாகப் பரவி வருவதையடுத்து, கற்றல் நடவடிக்கைகளை இணையவழி முறையில் முன்னெடுப்பதற்கு கல்விச் சபை தீர்மானித்துள்ளது.

இதன் காரணமாக, இறுதியாண்டு மாணவர்களைத் தவிர்ந்த பெரும்பாலான மாணவர்களை இன்று பிற்பகல் வீடுகளுக்கு அனுப்புவதற்கு நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

பல மாணவர்களுக்கு தலைச்சுற்றல், வாந்தி மற்றும் வயிற்றுவலி உள்ளிட்ட அறிகுறிகள் ஏற்பட்டுள்ள நிலையில், நோய் மேலும் பரவுவதைத் தடுக்கும் வகையில், பல்கலைக்கழக மருத்துவச் சபையின் பரிந்துரையின் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டால், எதிர்வரும் வாரத்தில் வழமைபோன்று கற்றல் நடவடிக்கைகளை மீண்டும் ஆரம்பிக்க முடியும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, மாணவர்கள் முச்சக்கர வண்டிகளில் சென்று மருத்துவ சிகிச்சை பெற்ற பின்னர் மீண்டும் தங்களது விடுதிகளுக்குத் திரும்பிச் சென்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
Related recommendation
Hiru TV News | Programmes