General05 October 2026

மருத்துவ சிகிச்சைக்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் சிங்கப்பூர் பயணம்

மருத்துவ சிகிச்சை பெற்றுக்கொள்வதற்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று இரவு சிங்கப்பூர் செல்லவுள்ளதாக அவரது ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

அதன்படி, நள்ளிரவு 1.45 க்கு சிங்கப்பூர் நோக்கிப் புறப்படும் வானூர்தி மூலம் அவர் நாட்டிலிருந்து புறப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதியின் இந்தப் பயணம் மருத்துவ சிகிச்சையைப் பெற்றுக்கொள்வதற்கான தனிப்பட்ட பயணம் என அவரது ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
Related recommendation
Hiru TV News | Programmes