இலங்கை சிறைகளில் உள்ள தமிழக கடற்றொழிலாளர்கள் மற்றும் அவர்களின் மீன்பிடிப் படகுகளை விரைவில் விடுவித்து, தாயகம் திரும்பச் செய்வதற்கான நடவடிக்கைகள் தூதரக ரீதியாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக இந்திய மத்திய அரசு தெரிவித்துள்ளது.
தமிழக கடற்றொழிலாளர்கள் தொடர்பான வழக்கு, சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது மத்திய அரசு தாக்கல் செய்த பதில் மனுவில், இலங்கை சிறைகளில் தற்போது 39 இந்திய கடற்றொழிலாளர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர்களில் 12 பேர் யாழ்ப்பாண சிறையிலும், 18 பேர் வவுனியா சிறையிலும், 9 பேர் வெளிக்கடை சிறையிலும் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய கடற்றொழிலாளர்களின் பாதுகாப்பு மற்றும் நலனுக்கு மத்திய அரசு முக்கியத்துவம் அளித்து வருவதாகவும், அவர்களுக்கு தேவையான சட்ட உதவிகள், உணவு மற்றும் மருத்துவ வசதிகள் வழங்கப்பட்டு வருவதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மேலும், இந்திய கடற்றொழிலாளர்களையும் அவர்களின் படகுகளையும் விரைவாக விடுவித்து தாயகம் திரும்பச் செய்வது தொடர்பில், இலங்கை அரசுடன் இருதரப்பு மற்றும் தூதரக ரீதியான பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் நீதிமன்ற அமர்வில் கூறப்பட்டுள்ளது.
இதனிடையே, 12 இந்திய கடற்றொழிலாளர்கள் ஏற்கனவே விடுதலை செய்யப்பட்டுள்ளதாகவும், மேலும் 16 கடற்றொழிலாளர்கள் விரைவில் விடுதலை செய்யப்படுவார்கள் எனவும் மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீதமுள்ள 11 கடற்றொழிலாளர்களும் மூன்று முதல் ஆறு மாதங்கள் வரையான சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகவும், இந்தியா – இலங்கை ஒப்பந்தத்தின் அடிப்படையில் அவர்களது தண்டனையை குறைத்து விரைவில் தாயகம் திரும்ப நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மத்திய அரசின் சட்டத்தரணி நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
இதனைப் பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், தமிழக கடற்றொழிலாளர்கள் இனிமேல் எல்லை தாண்டி கடற்றொழிலில் ஈடுபடாது, கவனமாக செயற்பட வேண்டும் என அறிவுறுத்தி, மனுவை இறுதி செய்துள்ளனர்.
Latest News
"நீங்கள் வெட்கப்பட வேண்டும்": சீதையின் காட்சிகளை விமர்சித்த முகேஷ் கண்ணா!
Local
11 November 2026
டிரினிடாட் மற்றும் டொபாகோவில் தன்பாலின உறவுகளுக்கு சட்டபூர்வ அங்கீகாரம்!
Local
11 November 2026
2027 பாதீட்டில் சர்வதேச நாணய நிதியத்தின் பரிந்துரைகள்: இந்தோ - பசுபிக் பாதுகாப்புக்கு முன்னுரிமை!
Local
10 November 2026
உலக அமைதிக்கு அச்சுறுத்தலாக இஸ்ரேல் – 78% பிரிட்டன் மக்கள் கருத்து!
Local
10 November 2026
கலகெடிஹேனயில் வர்த்தகர்களை ஏமாற்ற முயற்சி செய்யும் நபர்: விழிப்புடன் இருக்குமாறு சமூக வலைத்தளங்களில் எச்சரிக்கை!
Local
10 November 2026
குரங்கால் இருளில் மூழ்கிய பொகவந்தலாவை நகரம்!
Local
10 November 2026
இலங்கையின் பொருளாதார வளர்ச்சியுடன் சுற்றுச்சூழல் பாதிப்புகளையும் கணக்கிட புதிய முறைமை அவசியம்!
Local
10 November 2026
தானாக திறந்த விக்டோரியா நீர்த்தேக்கத்தின் 4 வான் கதவுகள்: கண்டி - கொழும்பு வீதி தற்காலிகமாக மூடல்!
Local
10 November 2026
இந்தியாவில் இருக்கும் ஷேக் ஹசீனாவுக்குப் பேரதிர்ச்சி! மரண தண்டனை குறித்து கடும் எச்சரிக்கை!
Local
10 November 2026
கடல் ஆமைகள், பறவைகளை உண்டு 100 நாட்கள் போராட்டம்: பசுபிக் கடலில் தத்தளித்து உயிர் பிழைத்த ஐவர்!
Local
10 November 2026