பெருந்தோட்டத் தொழிலாளர்களை இழிவுப்படுத்தும் வகையில் வார்த்தைப் பிரயோகங்களை பயன்படுத்துவதற்கு எவருக்கும் அதிகாரம் இல்லை என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் செந்தில் தொண்டமான் விசேட ஊடக அறிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.
நுவரெலியா - லவர்ஸ்லீப் தோட்டத்தில், தங்களுக்கென வழங்கப்பட்ட காணியில் வீடு அமைப்பதற்கான இடத்தைப் பார்வையிடச் சென்ற தோட்டத் தொழிலாளர்களுக்கும், தோட்ட நிர்வாகத்தைச் சேர்ந்த ஒருவருக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதத்தின்போது, தொழிலாளர்களை இழிவுப்படுத்தும் வகையிலான வார்த்தைப் பிரயோகங்கள் பயன்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தை வன்மையாகக் கண்டிப்பதாக செந்தில் தொண்டமான் கூறியுள்ளார்.
தோட்டத் தொழிலாளர்கள் அனைவரும் இந்த நாட்டின் பிரஜைகள் எனக் குறிப்பிட்டுள்ள அவர், நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்காக பெருந்தோட்டத் தொழிலாளர்கள் நீண்டகாலமாக தமது உழைப்பை வழங்கி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
எனவே, சம்பவத்துடன் தொடர்புடைய அதிகாரிக்கு எதிராக தோட்ட நிர்வாகம் உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
அவ்வாறு நடவடிக்கை எடுக்கத் தவறினால், குறித்த பெருந்தோட்ட நிறுவனத்திற்கு எதிராக கடுமையான தொழிற்சங்க நடவடிக்கைகளை முன்னெடுக்க நேரிடும் எனவும் செந்தில் தொண்டமான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Latest News
"நீங்கள் வெட்கப்பட வேண்டும்": சீதையின் காட்சிகளை விமர்சித்த முகேஷ் கண்ணா!
Local
11 November 2026
டிரினிடாட் மற்றும் டொபாகோவில் தன்பாலின உறவுகளுக்கு சட்டபூர்வ அங்கீகாரம்!
Local
11 November 2026
2027 பாதீட்டில் சர்வதேச நாணய நிதியத்தின் பரிந்துரைகள்: இந்தோ - பசுபிக் பாதுகாப்புக்கு முன்னுரிமை!
Local
10 November 2026
உலக அமைதிக்கு அச்சுறுத்தலாக இஸ்ரேல் – 78% பிரிட்டன் மக்கள் கருத்து!
Local
10 November 2026
கலகெடிஹேனயில் வர்த்தகர்களை ஏமாற்ற முயற்சி செய்யும் நபர்: விழிப்புடன் இருக்குமாறு சமூக வலைத்தளங்களில் எச்சரிக்கை!
Local
10 November 2026
குரங்கால் இருளில் மூழ்கிய பொகவந்தலாவை நகரம்!
Local
10 November 2026
இலங்கையின் பொருளாதார வளர்ச்சியுடன் சுற்றுச்சூழல் பாதிப்புகளையும் கணக்கிட புதிய முறைமை அவசியம்!
Local
10 November 2026
தானாக திறந்த விக்டோரியா நீர்த்தேக்கத்தின் 4 வான் கதவுகள்: கண்டி - கொழும்பு வீதி தற்காலிகமாக மூடல்!
Local
10 November 2026
இந்தியாவில் இருக்கும் ஷேக் ஹசீனாவுக்குப் பேரதிர்ச்சி! மரண தண்டனை குறித்து கடும் எச்சரிக்கை!
Local
10 November 2026
கடல் ஆமைகள், பறவைகளை உண்டு 100 நாட்கள் போராட்டம்: பசுபிக் கடலில் தத்தளித்து உயிர் பிழைத்த ஐவர்!
Local
10 November 2026