2028 முதல் 2034 வரையிலான ஏழு ஆண்டுகளுக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் (EU) வரவுசெலவுத் திட்ட முன்மொழிவில் 8 சதவீதத்தைக் குறைப்பதற்கு அயர்லாந்து தலைமையிலான ஐரோப்பிய ஒன்றிய தலைமைத்துவம் முன்மொழிந்துள்ளது.
இதன்படி, ஐரோப்பிய ஆணையத்தால் (European Commission) ஆரம்பத்தில் முன்வைக்கப்பட்ட 2 டிரில்லியன் யூரோ வரவுசெலவுத் திட்ட முன்மொழிவை, 1.6 டிரில்லியன் யூரோவாக (சுமார் 1.79 டிரில்லியன் அமெரிக்க டொலர்கள்) குறைப்பதற்கு முன்மொழியப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
முன்மொழியப்பட்டுள்ள இந்தக் குறைப்பு போதுமானதாக இல்லை எனத் தெரிவித்து, செலவினங்களைக் கட்டுப்படுத்துவதில் அதிக கவனம் செலுத்தும் சில ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகள் இந்த முன்மொழிவை விமர்சித்துள்ளன.
இந்த முன்மொழியப்பட்ட வரவுசெலவுத் திட்டம், 2021 முதல் 2027 வரை நடைமுறையிலுள்ள தற்போதைய வரவுசெலவுத் திட்டத்தை விட சுமார் 30 சதவீதம் அதிகமாகும்.
ஐரோப்பிய ஒன்றியத்தின் 27 உறுப்பு நாடுகளின் முக்கிய கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதற்கான முதன்மை நிதியாதாரமாக இந்த வரவுசெலவுத் திட்டமே விளங்குகின்றது.
பணவீக்கத்தைக் கருத்தில் கொண்டு, 2025 ஆம் ஆண்டின் விலைகளின் அடிப்படையில் ஐரோப்பிய ஆணையத்தின் மூல முன்மொழிவு 1.76 டிரில்லியன் யூரோவாகக் கணக்கிடப்பட்ட பின்னரே, இந்த 8 சதவீதக் குறைப்பு முன்மொழிவு சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவித்துள்ளன.
Latest News
உலகளவில் ரூ.1,200 கோடியைக் கடந்தது ‘ராமாயணா’ திரைப்படம்!
Local
16 November 2026
'விஜய் செய்ததை நீங்களும் செய்யாதீர்கள்' - தனுஷுக்கு சாய்பல்லவி கோரிக்கை!
Local
15 November 2026
பெண்களுக்கு எதிரான வன்முறைகளைக் கண்டித்து ஆண்கள் போராட்டம்!
Local
15 November 2026
அரோகரா கோஷம் முழங்க வத்தளையில் சூரசம்ஹாரம்!
Local
15 November 2026
25 வாரக் கருவுக்கு அறுவை சிகிச்சை: இந்திய மருத்துவர்களின் புதிய சாதனை!
Local
15 November 2026
எதிர்வரும் ஜனவரி வரை இசையமைக்க மாட்டேன்!.. அனிருத்தின் முடிவால் அதிர்ச்சியில் இயக்குநர்கள்!
Local
15 November 2026
அடுத்த ஆண்டு சீனாவில் வெளியாகிறது ‘ராமாயணா’ திரைப்படம்!
Local
15 November 2026
இறக்குமதி விபரங்கள் இல்லாமல் தொலைபேசி விற்பனை – நிறுவனத்திற்கு அபராதம்!
Local
15 November 2026
வைரலாகும் ஜெனிலியாவின் 5 பைசா தோடு.. விலை 2 லட்சம் ரூபாய்!
Local
15 November 2026
இந்தியாவில் வாழ்ந்த ராட்சத யானைகள் – அழிவுக்கான காரணம் என்ன?
Local
15 November 2026