International11 October 2026

ரியாத் வானூர்தி நிலையம் மீதான தாக்குதல்கள்: அமெரிக்கக் குடிமக்களுக்கு பாதுகாப்பு எச்சரிக்கை

சவூதி அரேபியாவின் ரியாத் நகரிலுள்ள கிங் காலித் சர்வதேச வானூர்தி நிலையத்தை இலக்கு வைத்து நடத்தப்பட்ட தாக்குதல்களைத் தொடர்ந்து, அந்தநாட்டில் உள்ள அமெரிக்கக் குடிமக்களுக்கு ரியாத்திலுள்ள அமெரிக்கத் தூதரகம் விசேட பாதுகாப்பு எச்சரிக்கையை விடுத்துள்ளது.

இதன்படி, கிங் காலித் சர்வதேச வானூர்தி நிலையத்திற்கும் அதனைச் சூழவுள்ள பகுதிகளுக்கும் பயணம் செய்வதைத் தவிர்க்குமாறு அமெரிக்கக் குடிமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

அத்துடன், சவூதி அரேபியாவின் ஏனைய முக்கிய வானூர்தி நிலையங்களைப் பயன்படுத்தும்போதும் மிகுந்த எச்சரிக்கையுடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், ரியாத், ஜித்தா மற்றும் தம்மாம் சர்வதேச வானூர்தி நிலையங்களைப் பயன்படுத்துவதற்கு சவூதி அரேபியாவில் பணியாற்றும் அமெரிக்க அரசாங்கப் பணியாளர்கள் விசேட அனுமதியைப் பெற வேண்டும் எனக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

அதேவேளை, யேமன் எல்லையிலிருந்து 20 மைல் சுற்றளவுக்குள் பயணிப்பதற்கும் கடுமையான தடை விதிக்கப்பட்டுள்ளது.

தாக்குதல்களால் வானூர்தி பயணங்கள் இரத்துச் செய்யப்படுதல், வான்வெளி மூடப்படுதல் மற்றும் போக்குவரத்துத் தடைகள் ஏற்படக்கூடும் என்பதால், பயணிகள் தங்களது வானூர்தி பயண விபரங்களை சம்பந்தப்பட்ட வானூர்தி நிறுவனங்கள் அல்லது வானூர்தி நிலைய அதிகாரிகளிடம் நேரடியாக உறுதிப்படுத்திக்கொள்ளுமாறும் அமெரிக்கத் தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.

Related recommendation
Hiru TV News | Programmes