General11 October 2026

புதிய எரிபொருள் நிரப்பு நிலையங்களை அமைக்க கவனம் – அமைச்சர் அநுர கருணாதிலக்க

எதிர்காலத்தில் புதிய எரிபொருள் நிரப்பு நிலையங்களை அமைப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டு வருவதாக எரிசக்தி அமைச்சர் அநுர கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று (10) நடைபெற்ற கருத்தரங்கொன்றின் பின்னர் ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது சந்தையில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படுவதற்கு ஒருபோதும் இடமளிக்கப்பட மாட்டாது எனவும் அமைச்சர் உறுதியளித்துள்ளார்.

மேலும், இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தனது நாளாந்த எரிபொருள் விநியோகத்தை சுமார் 80 சதவீதமாக அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Related recommendation
Hiru TV News | Programmes