Business05 October 2026

டயலொக் மற்றும் இந்திரா புற்றுநோய் அறக்கட்டளை இணைந்து 'Yeheli.lk' ஊடாக மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு

இலங்கையின் முதன்மைத் தொடர்புச் சேவை வழங்கி இலங்கையின் முதன்மைத் தொடர்புச் சேவை வழங்கி நிறுவனமான Dialog Axiata PLC, மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு மாதத்தின் தொடக்கத்தைக் குறிக்கும் வகையில், இந்திரா புற்றுநோய் அறக்கட்டளையுடன் (Indira Cancer Trust) இணைந்து தனது தலைமையகப் பணியகத்தை இளஞ்சிவப்பு (Pink) வண்ண விளக்குகளால் ஒளிரச் செய்துள்ளது.

மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நபர்கள் மற்றும் குடும்பங்களுக்குத் தனது ஆதரவை வெளிப்படுத்தவும், இது குறித்த விழிப்புணர்வு, வழக்கமான மருத்துவப் பரிசோதனைகள் மற்றும் ஆரம்பகட்டக் கண்டறிதலை ஊக்குவிக்கவும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

டயலொக் நிறுவனத்தின் 'Yeheli.lk டிஜிட்டல் தளம் வழியாக இந்திரா புற்றுநோய் அறக்கட்டளையுடன் இணைந்து முன்னெடுக்கப்படும் இத்தகைய விழிப்புணர்வுப் பிரசாரங்களின் தொடர்ச்சியாக, இந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் முழுவதும் ‘இதயத்திலிருந்து ஒரு உறுதிமொழி’ (A Pledge from the Heart) எனும் தொனிப்பொருளில் விழிப்புணர்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

இதன்கீழ், பொதுமக்கள் yeheli.lk தளத்திற்குச் சென்று, மார்பகப் புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டறிவதற்கான இலவச மாதாந்திர எஸ்.எம்.எஸ் நினைவூட்டல்களைப் பெறப் பதிவுசெய்து, தங்களது உறுதிமொழியையும் எடுத்துக்கொள்ள முடியும்.

நம்பகமான மற்றும் மருத்துவ நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டத் தகவல்களைப் பொதுமக்களுக்கு எளிதில் கிடைக்கச் செய்வதன் மூலம், மார்பக ஆரோக்கியம் குறித்த திறந்த உரையாடல்களை ஊக்குவிப்பதுடன், சுய மார்பகப் பரிசோதனைகள் மற்றும் ஆரம்பகட்டக் கண்டறிதலின் முக்கியத்துவத்தை வலியுறுத்துவதையும் இந்த திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.

இந்த நிகழ்வில் இந்திரா புற்றுநோய் அறக்கட்டளையின் தலைவரும் அறங்காவலருமான மருத்துவர் லங்கா ஜயசூரிய திசாநாயக்க மற்றும் இலங்கை புற்றுநோயியல் நிபுணர்கள் கல்லூரியின் (SLCO) தலைவர் மருத்துவர் சஞ்சீவ குணசேகர ஆகியோருடன் Dialog Axiata PLC நிறுவனத்தின் சார்பில் பணிப்பாளர் / குழும முதன்மை நிறைவேற்று அதிகாரி சுபுன் வீரசிங்க, குழும முதன்மை நிறுவன அதிகாரி அசங்க பிரியதர்ஷன, குழும முதன்மை மனிதவள அதிகாரி ரேகா வீரசூரிய மற்றும் குழும முதன்மை நிதி அதிகாரி சிம் சியூ ஷான் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

இது குறித்து இந்திரா புற்றுநோய் அறக்கட்டளையின் தலைவரும் அறங்காவலருமான மருத்துவர் லங்கா ஜயசூரிய திசாநாயக்க தெரிவிக்கையில்,

“மார்பகப் புற்றுநோய் சிகிச்சையின் முடிவுகளை மேம்படுத்துவதில் ஆரம்பகட்டக் கண்டறிதல் மிக முக்கியப் பங்கு வகிக்கிறது.

எனவே தொடர்ச்சியான விழிப்புணர்வும், துல்லியமான தகவல்களைப் பெறுவதும் அவசியமாகிறது.

டயலொக் நிறுவனத்துடனான எங்களது தொடர் பங்களிப்பானது, Yeheli.lk தளம் வழியாக அதிகமான மக்களைச் சென்றடையவும்; பெண்கள், அவர்தம் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களை மார்பக ஆரோக்கியம் குறித்துக் கவனத்துடன் செயல்படவும், வழக்கமான பரிசோதனைகளை மேற்கொண்டு தேவையான நேரத்தில் உரிய மருத்துவ ஆலோசனைகளைப் பெறவும் ஊக்குவிக்கிறது எனக் குறிப்பிட்டார்.

Dialog Axiata PLC நிறுவனத்தின் குழும முதன்மை நிறுவன அதிகாரி அசங்க பிரியதர்ஷன தெரிவிக்கையில்,

இந்திரா புற்றுநோய் அறக்கட்டளையுடனான எங்களது கூட்டுப்பணி, தொழில்நுட்பம் மற்றும் நம்பகமான பங்களிப்புகள் மூலம் முக்கிய ஆரோக்கியத் தகவல்களை எளிதில் கிடைக்கச் செய்து சமூக நிலைத்தன்மையை மேம்படுத்துவதற்கான டயலொக்கின் அர்ப்பணிப்பைப் பிரதிபலிக்கிறது.

இந்த மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு மாதத்தில், Yeheli.lk தளம் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு மட்டுமன்றி, நிபுணர்களால் சரிபார்க்கப்பட்ட தகவல்கள் மற்றும் வழக்கமான நினைவூட்டல்கள் மூலம் மக்கள் சரியான நேரத்தில் தகுந்த நடவடிக்கை எடுக்க வழிவகை செய்கிறோம்.

இதயத்திலிருந்து ஒரு உறுதிமொழி பிரசாரத்தின் மூலம், சமூகம் முழுவதும் விழிப்புணர்வு மற்றும் ஆரம்பக்கட்டக் கண்டறிதலைத் தொடர்ச்சியாக ஊக்குவிக்க நம்புகிறோம் எனக் கூறினார்.

சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் இயங்கும் இலங்கையின் முதலாவது anonymous டிஜிட்டல் ஆலோசனைத் தளமான Yeheli.lk, ஆரோக்கியம், சட்டம் மற்றும் உளவியல் சமூக விவகாரங்கள் குறித்து நிபுணர்களால் சரிபார்க்கப்பட்ட ஆலோசனைகளை வழங்குகிறது.

பகிரங்கமாகப் பேசக் கடினமாக இருக்கும் தலைப்புகள் குறித்து பாதுகாப்பான முறையில் தகவல்களைப் பெற இத்தளம் வழிவகுக்கிறது.

மேலும், இதில் உள்ள AI தொழில்நுட்பத்தில் இயங்கும் Chat & Voice Bot மூலம் 24 மணிநேரமும் இலவசமாகவும் இரகசியமாகவும் ஆலோசனைகளைப் பெற முடியும்.

‘இதயத்திலிருந்து ஒரு உறுதிமொழி’ முன்னெடுப்பின் மூலம், மார்பக ஆரோக்கியம் பற்றிய உரையாடலை ஒக்டோபர் மாதத்தைத் தாண்டியும் கொண்டு சென்று, பொதுமக்கள் நம்பகமான வழிகாட்டுதல்களைப் பெறவும், விழிப்புணர்வுடன் செயல்பட்டுத் தங்களது ஆரோக்கியத்திற்காக உரிய நேரத்தில் நடவடிக்கை எடுக்கவும் டயலொக் மற்றும் இந்திரா புற்றுநோய் அறக்கட்டளை இணைந்து பணியாற்றுகின்றன.
மேலதிக விவரங்களுக்கு www.yeheli.lk என்ற இணையதளத்தைப் பார்வையிடலாம்.
Related recommendation
Hiru TV News | Programmes