Entertainment05 October 2026

கூலான அம்மாவாக இருப்பேன்’: எதிர்காலத் தாய்மை குறித்து நடிகை தமன்னா நெகிழ்ச்சி!

எதிர்காலத்தில் திருமணம் செய்துகொண்டு குழந்தைகள் பெற்றுக்கொண்டால், எந்த மாதிரியான தாயாக இருப்பீர்கள் என்று நிகழ்ச்சி ஒன்றில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பிரபல நடிகை தமன்னா பதில் அளித்துள்ளார்.

இது குறித்து அவர் பேசுகையில், எதிர்காலத்தில் குழந்தைகள் பிறந்தால் தான் மிகவும் கண்டிப்பான அம்மாவாக இருப்பேன் எனத் தனது அம்மா நினைப்பதாகவும், ஆனால் அதில் தனக்கு உடன்பாடு இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

தான் மிகவும் கூலான அம்மாவாகவும், குழந்தைகளுடன் சகஜமாகவும் ஜாலியாகவும் பழகக்கூடிய தாயாகவுமே இருப்பேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், "இன்று பாடசாலைக்கு போக வேண்டாம், சந்தோஷமாக வீட்டிலேயே இருங்கள்" என்று சொல்லக்கூடிய அம்மாவாக இருக்க விரும்புவதாகவும், தாயாக மட்டுமில்லாமல் தன் குழந்தைகளின் நல்ல தோழியாக இருக்க வேண்டும் என்பதே தன் ஆசை என்றும் தமன்னா தெரிவித்துள்ளார்.
Related recommendation
Hiru TV News | Programmes