Entertainment05 October 2026

வெளியீட்டிற்கு முன்பே ரூ. 500 கோடி வியாபாரம்! சாதனைகளை தவிடுபொடியாக்கும் ரஜினியின் 'ஜெயிலர் 2'!

நெல்சன் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்தின் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'ஜெயிலர் 2'.

இந்த திரைப்படத்தில் எஸ். ஜே. சூர்யா, வித்யா பாலன், சுராஜ் வெஞ்சாரமூடு, மிதுன் சக்கரவர்த்தி ஆகியோர் நடித்து வருகின்றனர்.

கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியான ஜெயிலர் திரைப்படம் இந்திய மதிப்பில் ரூ. 616 கோடி வசூலித்து சாதனை படைத்திருந்தது.

இந்தநிலையில் "ஜெயிலர் 2" திரைப்படம், திரையரங்குகளில் வெளியாவதற்கு முன்பாகவே ரூ. 500 கோடியைத் தாண்டி வியாபாரம் செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த திரைப்படத்தின் தயாரிப்பு செலவாக ரூ. 400 கோடி என்று கூறப்படும் நிலையில், வெளியாவதற்கு முன்னரே பிரம்மாண்ட அளவில் வியாபாரம் ஆகியுள்ளது.

குறிப்பாக, படத்தின் வெளிநாட்டுத் திரையரங்க உரிமைகள் சுமார் ரூ. 90 கோடிக்கும், டிஜிட்டல் ஓடிடி உரிமைகள் ரூ. 105 கோடி வரையிலும் விற்பனையாகியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Related recommendation
Hiru TV News | Programmes