Sports03 October 2026

ஆசிய விளையாட்டுப் போட்டிகள்: ஆடவர் கிரிக்கெட்டில் இலங்கை அணி வெண்கலப் பதக்கம் வென்றது

ஆசிய விளையாட்டுப் போட்டியின் ஆடவர் கிரிக்கெட் தொடரில் மூன்றாம் இடத்திற்கான போட்டியில் இலங்கை அணி 63 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பங்களாதேஷ் அணியை வீழ்த்தி வெண்கலப் பதக்கத்தைக் கைப்பற்றியுள்ளது.

இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 165 ஓட்டங்களைப் பெற்றது.

166 ஓட்டங்கள் வெற்றி இலக்குடன் பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 17.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 102 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது.

இதன்மூலம் இலங்கை அணி 63 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று வெண்கலப் பதக்கத்தைச் சொந்தமாக்கியது.
Related recommendation
Hiru TV News | Programmes