Sports03 October 2026

மேற்கிந்திய தீவுகள் - இந்தியா அணிகளுக்கிடையிலான 3ஆவது ஒருநாள் போட்டி: போட்டியை கைப்பற்றப்போவது யார்!

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணிக்கு எதிரான 3 ஆவதும் இறுதியுமான ஒருநாள் போட்டி இன்று நியூ சண்டிகரில் (New Chandigarh) நடைபெற்று வருகிறது.

இன்று பிற்பகல் 2 மணிக்குத் ஆரம்பித்த இந்தப் போட்டியில், சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி நாணய சுழற்சியில் வெற்றி பெற்று துடுப்பாட்டதை தெரிவு செய்து தற்சமயம் துடுப்பெடுத்தாடி வருகிறது.

3 போட்டிகள் கொண்ட இந்த ஒருநாள் தொடரின் முதல் இரண்டு போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் ஏற்கனவே தொடரைக் கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 
Related recommendation
Hiru TV News | Programmes