Sports03 October 2026

வாஷிங்டன் சுந்தருக்கு ரூ. 75 இலட்சம் ஊக்கத்தொகை: முதலமைச்சர் விஜய் அறிவிப்பு!

ஜப்பானில் நடைபெற்று வரும் 20 ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், ஆடவர் கிரிக்கெட் பிரிவில் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ள இந்திய ஆடவர் அணிக்கும் தமிழ்நாட்டு முதலமைச்சர் சி.ஜோசப் விஜய் வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த அணியில் இடம்பெற்றுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் வாஷிங்டன் சுந்தருக்கும் தனது மனமார்ந்த வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்வதாக தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில் கிரிக்கெட் வீரர் வாஷிங்டன் சுந்தரின் சாதனையைப் பாராட்டி, தமிழ்நாடு அரசின் சார்பில் உயரிய ஊக்கத்தொகையாக ரூ. 75 இலட்சம் வழங்கப்படும் என்றும் அவரது வெற்றி இளைய தலைமுறையினருக்கு புதிய உத்வேகத்தையும், நம்பிக்கையையும் அளிக்கும் என தெரிவித்துள்ளார்.

மேலும் வாஷிங்டன் சுந்தர் கிரிக்கெட் போட்டிகளில் சிறப்பாக விளையாடி மேலும் பல சாதனைகள் படைக்க வாழ்த்துவதாகவும் முதலமைச்சர் விஜய் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.
Related recommendation
Hiru TV News | Programmes