Sports03 October 2026

3ஆவது ஒருநாள் போட்டி: தொடரை முழுமையாகக் கைப்பற்றுமா இந்தியா?

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான 3 ஆவதும் இறுதியுமான ஒருநாள் போட்டியில், இந்திய அணி 50 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 351 ஓட்டங்கள் குவித்து, மேற்கிந்திய தீவுகளுக்கு 352 ஓட்டங்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.

இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது.

முதலில் களமிறங்கிய இந்திய அணியின் தலைவர் சுப்மன் கில் ஒரு ஓட்டங்களிலும், அதன் பின்னர் களமிறங்கிய விராட் கோலி ஓட்டங்களின்றி (டக் அவுட்) முறையிலும் ஆட்டமிழந்தனர்.

அதன்பின்னர், இணைப்பாட்டத்தில் இணைந்த ஆரம்ப துடுப்பாட்ட வீரரான ரோகித் சர்மா மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் ஜோடி 3 ஆவது விக்கெட்டுக்காக 137 ஓட்டங்களை சேர்த்த நிலையில் ரோகித் சர்மா 92 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்து ஆட்டமிழந்தார்.

ருதுராஜ் கெய்க்வாட் அரை சதம் கடந்து 57 ஓட்டங்களை பெற்றிருந்த போது ஆட்டமிழந்தார்.

அடுத்து வந்த கே.எல்.ராகுல் முதலில் பொறுமையாக துடுப்பெடுத்தாடி வந்த நிலையில் கடைசி கட்டத்தில் அதிரடியாக ஆடி சதமடித்து அசத்தினார்.

அவர் மொத்தமாக 87 பந்துகளில் 129 ஒட்டங்களை (10 நான்கு ஓட்டங்கள் , 6 ஆறு ஓட்டங்கள்) அணிக்காக பெற்றுக் கொடுத்தார்.

தொடர்ந்து சீரான வேகத்தில் ஓட்டங்களை உயர்த்திய இந்திய துடுப்பாட்ட வீரர்களின் அதிரடி ஆட்டத்தால் இந்தியா அணி வலுவான ஓட்டக்குவிப்பை எட்டியது.

ஏற்கனவே நடைபெற்ற முதல் இரு ஒருநாள் போட்டிகளிலும் வெற்றி பெற்று இந்திய அணி 2-0 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றிவிட்டது.

இந்தநிலையில், இந்த இறுதிப் போட்டியிலும் வெற்றி பெற்று தொடரை 3-0 என முழுமையாகக் கைப்பற்றும் (Clean Sweep) நோக்கில் இந்திய அணி பந்துவீச்சில் களமிறங்குகிறது.

352 ஓட்டங்கள் என்ற இலக்கை நோக்கி மேற்கிந்திய தீவுகள் அணி தற்போது களத்தில் துடுப்பெடுத்தாடி வருகிறது.
Related recommendation
Hiru TV News | Programmes