Sports04 October 2026

3 ஆவது ஒருநாள் போட்டி: 352 ஓட்டங்கள் இலக்கை எட்டி இந்தியாவை வீழ்த்தியது மேற்கிந்திய தீவுகள் அணி!

நியூ சண்டிகரில் நடைபெற்ற இந்தியாவுக்கு எதிரான 3ஆவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில், மேற்கிந்திய தீவுகள் அணி 352 ஓட்டங்கள் என்ற கடின இலக்கை எட்டி அபார வெற்றி பெற்றுள்ளது.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மேற்கிந்திய தீவுகள் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்றது.

முதல் இரு போட்டிகளிலும் வெற்றி பெற்ற இந்திய அணி ஏற்கனவே 2-0 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றியிருந்த நிலையில், கடைசிப் போட்டி நியூ சண்டிகரில் நடைபெற்றது.

இந்த போட்டியில் நாணய சுழட்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணிக்குத் தொடக்கத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது.

தொடக்க ஆட்டக்காரர் சுப்மன் கில் 1 ஓட்டத்திலும் அடுத்து வந்த விராட் கோலி ஓட்டம் எதுவுமின்றியும் (0) அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர்.

பின்னர் இணைந்த ரோகித் சர்மா மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் ஜோடி நிதானமாகவும் அதிரடியாகவும் விளையாடி அணியை மீட்டது.

இந்த ஜோடி 3-வது விக்கெட்டுக்கு 137 ஓட்டங்கள் சேர்த்த நிலையில், ரோகித் சர்மா 92 ஓட்டங்களிலும் கெய்க்வாட் 57 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர்.

அதைத் தொடர்ந்து களமிறங்கிய கே.எல். ராகுல் பொறுப்புடன் விளையாடி அதிரடியாகச் சதமடித்தார்.

இதன் மூலம் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 351 ஓட்டங்கள் குவித்தது.

அதைத் தொடர்ந்து 352 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி, ஆரம்பம் முதலே சிறப்பான மற்றும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி இலக்கை எட்டிப் பிடித்து அபார வெற்றி பெற்றது.
Related recommendation
Hiru TV News | Programmes