Sports10 October 2026

இருபதுக்கு 20 கிரிக்கெட்டில் 5000 ஓட்டங்கள்: விராட் கோலியின் சாதனையை முறியடித்த திலக் வர்மா!

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான 2 ஆவது இருபதுக்கு 20 போட்டியில் இந்திய அணியின் இளம் வீரர் திலக் வர்மா அதிரடியாக துடுப்பெடுத்தாடி 18 பந்துகளில் 44 ஓட்டங்களை குவித்தார்.

இதன் மூலம் இருபதுக்கு 20 கிரிக்கெட்டில் அதிவேகமாக (குறைந்த இன்னிங்ஸ்களில்) 5,000 ஓட்டங்களைக் கடந்த இந்திய வீரர்கள் பட்டியலில் விராட் கோலியின் சாதனையை அவர் முறியடித்துள்ளார்.

திலக் வர்மா தனது 166 ஆவது இன்னிங்ஸில் இந்த மைல்கல்லை எட்டி பட்டியலில் 05 ஆவது இடத்தில் உள்ளார். இதற்கு முன்பு விராட் கோலி 167 இன்னிங்ஸ்களில் இந்தச் சாதனையைப் படைத்திருந்தார்.

இந்தப் பட்டியலில் கே.எல். ராகுல் (143 இன்னிங்ஸ்கள்) முதலிடத்திலும், ருதுராஜ் கெய்க்வாட் (145 இன்னிங்ஸ்கள்) இரண்டாவது இடத்திலும், சுப்மன் கில் (154 இன்னிங்ஸ்கள்) மூன்றாவது இடத்திலும் உள்ளனர். அபிஷேக் சர்மா 165 இன்னிங்ஸ்களுடன் திலக் வர்மாவுக்கு அடுத்தபடியாக உள்ளார்.

இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது சர்வதேச இருபதுக்கு 20 போட்டியில், மேற்கிந்திய தீவுகள் அணி 6 விக்கெட்டுக்க்ள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
Related recommendation
Hiru TV News | Programmes