General24 May 2013

அரசாங்கம் பொருளாதார நெருக்கடியில் - ஜே வி பி

அரசாங்கத்திற்கு தற்போது இருக்கும் மிகப்பெரிய சிக்கல், பொருளாதார நெருக்கடி என்று ஜே வி பி தெரிவித்துள்ளது.

ஜே பி பியின் நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க இதனைத் தெரிவித்துள்ளார்.

மின்சார கட்டணங்களின் அதிகரிப்பை எதிர்த்து நேற்றைய தினம் ஜே வி பி கொழும்பில் பாதயாத்திரை ஒன்றை நடத்தியது.

இதன் போது உரையாற்றிய அனுரகுமாரதிஸாநாயக்க, அரசாங்கம் தற்போது பொருளாதார நெருக்கடியால் பாரிய சிக்கலுக்கு முகம் கொடுத்திருப்பதாக தெரிவித்துள்ளார். 

இதற்கு தீர்வு காண முடியாத நிலையிலேயே இவ்வாற பொது கட்டணங்களை அதிகரித்து வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
Related recommendation
Hiru TV News | Programmes