General25 May 2013

இலங்கையர்களுக்கு இந்திய குடியுரிமை


தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்பட வேண்டும் என்று, திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மு.கருணாநிதி கோரிக்கை விடுத்துள்ளார்.

அவர் விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாம் ஆட்சியில் இருந்த போது, தமிழகத்தில் உள்ள இலங்கையர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க முயற்சிகளை மேற்கொண்டதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அண்மையில் தமது நாட்டில் உள்ள இரண்டரை லட்சம் இந்தியர்களுக்கு எந்த ஆவணங்களும் இன்றி குடியுரிமை வழங்க அமெரிக்கா தீர்மானித்திருந்தது.

இந்த நிலையில் அதேபோன்று தமிழகத்தில் உள்ள ஒரு லட்சம் இலங்கை தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்பட வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார். 

Related recommendation
Hiru TV News | Programmes