Sports20 May 2013

முன்னணி வீரர் உள்ளிட்டோர் கைது

இந்தியன் பிரிமியர் லீக் போட்டியின் ஆட்டநிர்னய சதி தொடர்பில் முன்னணி முன்னாள் கிரிக்கெட் வீரர் உள்ளிட்ட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

டெல்லிகி காவல்துறையினர் இவர்களை நேற்று கைது செய்துள்ளனர்.

ரஞ்சி போட்டியில் பங்குகொள்ளும் வீரரான மனீஜ் குடேவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதுடன், இவர் தற்போது ஆட்டநிர்ணய சதி தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள அஜித் ஷண்டிலாவின் சகோதரர் என்று தெரிவிக்கப்படுகிறது.

சண்டிலாவை  தரகர்களிடம் அறிமுகஞ் செய்து வைத்தது இவரே என விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

ஆட்ட நிர்ணய சதி அமைப்பை கொண்டு நடத்தும் சுனில் பாட்டியா  மற்றும் தரகரான கிராண் டோல் ஆகியோரே கைது செய்யப்பட்டுள்ள ஏனையவர்களாவர்.

இதனிடையே, ஆட்டநிர்ணய சதி தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள சிறிசாந், ஷவான் மற்றும் சண்டிலா ஆகியோர் தொடர்ந்தும் தடுத்துவைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Related recommendation
Hiru TV News | Programmes