பசிலுக்கு எதிரான காணி வழக்கு ஒத்திவைப்பு

Friday, 23 May 2025 - 17:21

%E0%AE%AA%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF+%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%92%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81
முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கு எதிரான வழக்கு விசாரணையை எதிர்வரும் நவம்பர் 21 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பதாக மாத்தறை பிரதான நீதவான் அருண புத்ததாச உத்தரவிட்டார். 
 
மாத்தறை - ப்ரவுன்சில் பகுதியில் 1.5 ஏக்கர் நிலத்தை 50 மில்லியன் ரூபாய்க்குக் கொள்வனவு செய்தமை தொடர்பான வழக்கே இன்று ஒத்தி வைக்கப்பட்டது. 
 
இதன் போது பசில் ராஜபக்ஷ சுகவீனமுற்று வெளிநாட்டில் இருப்பதாக அவரது சட்டத்தரணிகள் நீதிமன்றத்திற்குத் தெரிவித்திருந்தனர். 
 
பசில் ராஜபக்ஷவின் மனைவியின் சகோதரியான புண்ய காந்தி என்பவரின் பெயரில், இந்தக் காணி 50 மில்லியன் ரூபாய்க்குக் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது. 
 
இந்த விடயம் தொடர்பில் 2017 ஆம் ஆண்டு நிதி குற்றப்புலனாய்வு பிரிவு அதிகாரிகளால் வழக்கொன்று தாக்கல் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.