பதுளை போதனா மருத்துவமனையின் மருத்துவர் பாலித ராஜபக்ஷ, ஒழுக்காற்று விசாரணையொன்றில் சாட்சியமளிக்க பொதுச் சேவை ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த காலங்களில் மருந்துப் பற்றாக்குறை தொடர்பாக அவர் அளித்த அறிக்கை தொடர்பாக நடத்தப்படும் ஒழுக்காற்று விசாரணை தொடர்பாக இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, இது தொடர்பாக சாட்சியங்கள் மற்றும் விடயங்களை வழங்க மருத்துவர் பாலித்த ராஜபக்ஷ இன்று (08) அழைக்கப்பட்டுள்ளார்.
இதனிடையே, எல்ல-வெல்லவாய வீதியில் கடந்த 4 ஆம் திகதி நிகழ்ந்த 15 பேரின் உயிரைப் பறித்த பேருந்து விபத்தில் காயமடைந்தவர்களின் உயிரைக் காப்பாற்றவும் அவர் தலைமையிலான மருத்துவ குழுவினர் பெரும் முயற்சிகளை முன்னெடுத்திருந்தமை தொடர்பில் பலரும் பாராட்டுக்களை தெரிவித்துவருகின்றன.