உயரதிகாரியின் தாயாருக்கு சிகிச்சையளிக்க வைத்தியரை கடத்திய காவல்துறை அதிகாரிகள்

Sunday, 21 September 2025 - 12:54

%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%88+%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D
இந்தியாவின் உத்தரபிரதேசம்- எட்டாவா பகுதியில் அரச மருத்துவமனையில் கடமையிலிருந்த மருத்துவரை வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்றதாக கூறப்படும் இரண்டு காவல்துறை அதிகாரிகள் பணியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

சம்பவத்தன்று நள்ளிரவில் குறித்த மருத்துவர் வைத்தியசாலையில் அவசர சிகிச்சை பிரிவில் பணியில் இருந்தபோது, சில காவல்துறை அதிகாரிகள் அங்கு பிரவேசித்து தங்களது சிரேஷ்ட அதிகாரியின் தாயாருக்கு உடனடியாக சிகிச்சை அளிக்க வருமாறு அவரை அழைத்துள்ளனர்.

எனினும், பல நோயாளர்களை கவனிக்க வேண்டிய இருப்பதால் வரமுடியாது என அந்த மருத்துவர் மறுப்பு தெரிவித்ததுடன், வேறு ஒருவரை அனுப்புவதாகவும் கூறியுள்ளார்.

இதனை ஏற்க மறுத்த காவல்துறையினர், அவரை வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று உயரதிகாரியின் தாயாருக்கு சிகிச்சை அளிக்க வைத்ததுடன், அவரது கைபேசியையும் பறித்துக்கொண்டதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவத்தை கண்டித்து எட்டாவா பகுதியிலுள்ள குறித்த வைத்தியசாலையின் பணியாளர்கள் பணிப்புறக்கணிப்பிலும் ஈடுபட்டதுடன், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.

இந்தநிலையில், உத்தரபிரதேச மாநில உயர்மட்ட காவல்துறையினர் விசாரணையின் பின்னர் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என கூறப்படும் இரு காவல்துறை அதிகாரிகள் பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளனர்.