ட்ரம்ப்பின் கிரிப்டோ வணிகம் அமோக வளர்ச்சி - புதிய நிதி அறிக்கையில் அதிர்ச்சி தகவல்

Wednesday, 01 July 2026 - 12:13

%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B+%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%95+%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF+-+%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF+%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் குடும்ப கிரிப்டோகரன்சி வணிகங்கள் மூலம், கடந்த ஓராண்டில் மாத்திரம் 1.4 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் அதிக வருமானம் கிடைத்துள்ளதாக அவரது புதிய நிதி நிலை விபரங்கள் மூலம் தெரியவந்துள்ளது.

அமெரிக்க அரச நெறிமுறைகள் அலுவலகத்திடம் சமர்ப்பிக்கப்பட்ட 2025ஆம் ஆண்டுக்கான நிதி அறிக்கையின்படி, ட்ரம்பும் அவரது மகன்களும் இணைந்து ஆரம்பித்த 'வேர்ல்ட் லிபர்ட்டி பைனான்சியல்' (World Liberty Financial) கிரிப்டோ நிறுவனம் மூலமாக 800 மில்லியன் டொலர்களும், ட்ரம்ப் ஞாபகார்த்த ‘மீம் கொயின்களை’ (Meme Coins) விற்பனை செய்ததன் மூலம் 635 மில்லியன் டொலர்களும் வருமானமாக ஈட்டப்பட்டுள்ளது.

2025இல் ட்ரம்ப் மீண்டும் ஜனாதிபதியானதைத் தொடர்ந்து, அமெரிக்காவில் கிரிப்டோ துறைக்கு சாதகமான கொள்கைகளை அமல்படுத்தியதன் மூலம் அவரது மின்னிலக்க சொத்துக்களின் மதிப்பு பல மடங்கு உயர்ந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதேவேளை, கிரிப்டோ தவிர அவரது பாரம்பரிய வணிகங்களான கோல்ஃப் மைதானங்கள் மற்றும் உல்லாச விடுதிகள் மூலமும் வருமானம் 15 சதவீதத்தால் அதிகரித்து, 500 மில்லியன் டொலரைக் கடந்துள்ளது.

குறிப்பாக, புளோரிடாவிலுள்ள அவரது 'மார்-ஏ-லாகோ' விடுதியின் வருமானம் 77 மில்லியன் டொலராக உயர்ந்துள்ளது.

இருப்பினும், ட்ரம்போ அல்லது அவரது குடும்பத்தினரோ தங்களது பதவியைப் பயன்படுத்தி எந்தவொரு தனிப்பட்ட ஆதாய மோதல்களிலும் ஈடுபடவில்லை என வெள்ளை மாளிகை விளக்கமளித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.