தென் கொரியாவில் உள்ள நக்சான்சா புத்தர் கோவிலில் இளைஞர்கள் தங்களது வாழ்க்கை துணையைத் தேடுவதற்காக டேட்டிங் ரிட்ரீட் எனும் சிறப்பு முகாம் நடத்தப்பட்டிருப்பது பல நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.
தென் கொரியாவில் தற்போது நிலவும் திருமணங்கள் குறைவு மற்றும் குழந்தை பெற்றுக்கொள்ளத் தயக்கம் போன்ற காரணங்களால், எதிர்காலத்தில் தொழிலாளர் பற்றாக்குறை மற்றும் முதியோர் எண்ணிக்கை அதிகரிப்பு போன்ற சவால்கள் ஏற்படும் அபாயம் நிலவுகிறது. இதற்குத் தீர்வாக இந்த புதிய அணுகுமுறை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த முகாமில் திருமணமாகாத இளைஞர்கள் ஒன்றாக தங்கி தியானம், யோகா,தேநீர் உரையாடல், கண்களை மூடி கொண்டு நம்பிக்கையை வளர்க்கும் நடைபயிற்சி மற்றும் தனிப்பட்ட சந்திப்புகள் போன்ற பல செயல்பாடுகளில் பங்கேற்றனர்.
சமூக ஊடகங்கள் மற்றும் செயலிகள் மூலம் ஏற்படும் அறிமுகங்களை விட, நேருக்கு நேர் சந்தித்து உரையாடுவதன் மூலம் ஒருவரை ஒருவர் ஆழமாகப்புரிந்து கொள்ளும் வாய்ப்பையும் இந்த முகாம் உருவாக்குகிறது .
இந்த ஆண்டில் நடைபெற்ற முகாமில் 20 நபர்கள் பங்கேற்கலாம் என்ற நிலையில், 4,225 பேர் விண்ணப்பித்திருப்பது, இதற்கு கிடைத்திருக்கும் பெரும் வரவேற்பைக் காட்டுகிறது.
தனிநபர்களை இணைக்கும் முயற்சியாக மட்டுமல்லாமல், மக்கள் தொகை சரிவு போன்ற சமூகச் பிரச்சனைக்கு மாற்று அணுகுமுறையாகவும் இந்த முகாம் அமைந்துள்ளது என்கிறார்கள்.