பிரபல ஹொலிவுட் இயக்குநர் கிறிஸ்டோபர் நோலனின் இயக்கத்தில் உருவாகியுள்ள பிரம்மாண்ட திரைப்படமான ‘தி ஒடிஸி’ (The Odyssey), இந்தியாவில் வெளியீட்டிற்கு முன்பே முன்பதிவில் பெரும் சாதனை படைத்துள்ளது.
ஹொலிவுட் நட்சத்திரங்களான மேட் டேமன் மற்றும் டாம் ஹாலண்ட் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இந்த திரைப்படம், ஜூலை 17ஆம் திகதி திரைக்கு வரவுள்ளது.
இதுவரை இந்த திரைப்படம் முன்பதிவு மூலம் இந்திய பெறுமதியில் 20 கோடி ரூபாய்க்கும் அதிகமான வசூலை ஈட்டியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த திரைப்படம் இந்தியா முழுவதும் சுமார் 2,500 திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
நாட்டின் முக்கிய நகரங்களில் உள்ள திரையரங்குகளில் டிக்கெட்டுகள் ஏற்கனவே விற்றுத் தீர்ந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஒட்டுமொத்தமாக இந்தியாவில் ஐமேக்ஸ் திரையரங்குகளில் மட்டும் 91,000க்கும் மேற்பட்ட டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன.
அத்துடன், புக் மை ஷோ தளத்தில் மட்டும் 1.4 இலட்சம் டிக்கெட்டுகள் விற்பனையாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கிறிஸ்டோபர் நோலனின் முந்தைய படைப்புகளான 'இன்செப்ஷன்', 'இன்டர்ஸ்டெல்லார்' மற்றும் 'ஓபன்ஹெய்மர்' ஆகிய திரைப்படங்கள் ரசிகர்களிடையே பெற்ற அதே வரவேற்பு, தற்போதைய ‘தி ஒடிஸி’ திரைப்படத்திற்கும் கிடைத்துள்ளது.







